காலையில் ஒரு ஸ்பூன் எள் சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?
எள் பல்வேறு நன்மைகளை உடலுக்கு செய்யும் ஒரு பொருளாக உள்ளது.
ஒரு கப் பாலில் உள்ள கால்சியம் சத்து ஒரு கையளவு எள்ளில் உள்ளது. பால் சாப்பிட முடியாதவர்கள் எள்ளு மிட்டாய் சாப்பிட்டாலே தேவையான கால்சியம் உடலுக்கு கிடைத்து விடும்.
காலை உணவிற்கு 3 மணி நேரத்திற்கு முன் 20 கிராம் கறுப்பு எள்ளை மென்று தின்று தண்ணீர் குடியுங்கள். உடல் குண்டாக இருப்பவர்கள் இளைக்கவும், ஒல்லியானவர்கள் பருக்கவும் வைக்கும்.
படுக்கையில் சிறுநீர் கழிக்கும் குழந்தைகளுக்கு இரவில் வெள்ளை முள்ளங்கியுடன் ஒரு ஸ்பூன் எள் சேர்த்துக் கொடுத்தால் விரைவில் குணம் தெரியும்.
எள்ளில் உள்ள செம்புச்சத்து இரத்தக் குழாய்களின் சுருங்கி விரியும் தன்மை அதிகப்படுத்துகிறது. இதனால் இருதய சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கிறது.
மூட்டு வலி உள்ளவர்களுக்கு வலியையும், வீக்கத்தையும் எள் குறைக்கிறது. எள்ளில் உள்ள செம்பு சத்து, கால்சியச் சத்து, மக்னீசியம் சத்து போன்றவை மூட்டுகளின் ஜவ்வுகளுக்கு தேவையான பலத்தை கொடுக்கிறது.