முடி உதிர்வை நிறுத்த உதவும் நல்லெண்ணெய்.., எப்படி பயன்படுத்துவது?
பொதுவாக ஆண்கள், பெண்கள் என அனைவருக்கும் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனை தான் முடி உதிர்வு.
தூக்கமின்மை, உணவு முறை, மருந்து மாத்திரைகள் உண்பது போன்ற காரணங்களால் முடி உதிர்வு பிரச்சனைகள் ஏற்படுகிறது.
அந்தவகையில், முடி உதிர்வை நிரந்தரமாக நிறுத்த நல்லெண்ணெய்யை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
எப்படி பயன்படுத்துவது?
முதலில் ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு நல்லெண்ணெயை எடுத்து மிதமாக சூடுபடுத்தவும்.
பின் மிதமான சூட்டில் உள்ள எண்ணெயை உச்சந்தலை மற்றும் முடியின் வேர்வரை நன்கு தேய்க்கவும்.

அடுத்து விரல் நுனிகளால் உச்சந்தலையில் வட்ட வடிவில் 10 நிமிடங்கள் மசாஜ் செய்யவும்.
இதற்கடுத்து 40 நிமிடங்கள் அப்படியே ஊறவிடவும். பின்னர் மென்மையான ஷாம்பூவை பயன்படுத்தி தலைக்கு குளிக்கலாம்.
கிடைக்கும் நன்மைகள்
நல்லெண்ணெயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், ஒமேகா கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் குளிர்கால முடி உதிர்வை குறைகிறது.
நல்லெண்ணெய் உச்சந்தலையை சுத்தமாக வைத்திருப்பதோடு, அரிப்பு மற்றும் பொடுகு தொல்லையை குறைக்கிறது.
முடியில் ஏற்படும் வறட்சி, முடியின் நுனியில் ஏற்படும் பிளவுகள் மற்றும் மாசுக்களால் ஏற்படும் பாதிப்புகளை இது சரிசெய்கிறது.
இந்த எண்ணெய் நரைப்பதை தடுத்து, முடியின் கருமை நிறத்தை பாதுகாக்க உதவுகிறது.
மேலும், உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |