பிரதமர் ரிஷி கட்சிக்கு மீண்டும் ஒரு பின்னடைவு: கேள்விக்குறியாகும் ஆளுங்கட்சியின் எதிர்காலம்
பிரித்தானியாவில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி, இடைத்தேர்தலில் மீண்டும் மண்ணைக் கவ்வியுள்ளதால், ஆளுங்கட்சியின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவருகிறது.
பிரதமர் ரிஷி கட்சிக்கு மீண்டும் ஒரு பின்னடைவு
பிரித்தானியாவில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி, இடைத்தேர்தலில் மீண்டும் ஒரு தோல்வியைச் சந்தித்துள்ளது.
ஏற்கனவே Tamworth இருக்கையை இழந்த நிலையில், நீண்ட காலமாக தங்கள் கைவசம் இருந்த Mid Bedfordshire இருக்கையையும் கன்சர்வேட்டிவ் கட்சியினர் இழந்துள்ளனர்.
பிரித்தானியாவில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி, வெள்ளிக்கிழமையன்று, லேபர் கட்சியிடம் இரண்டாவது மோசமான இடைத்தேர்தல் தோல்வியை சந்தித்துள்ளது. லேபர் கட்சியின் வெற்றி, பொதுத்தேர்தலில், பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அவரது கட்சிக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.
2019 பொதுத் தேர்தலில் 24,664 வாக்குகள் பெற்று அருதிப்பெரும்பான்மை பெற்ற Mid Bedfordshire இருக்கையை, கன்சர்வேட்டிவ் கட்சியினர் தற்போது 1,192 வாக்குகள் வித்தியாசத்தில் லேபர் கட்சியிடம் இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |