சுவிஸில் பட்டப்பகலில் பொலிசார் முன்னிலையில் தீக்குளித்த பெண்
சுவிட்சர்லாந்தில் லூசேன் அருகே பொலிசார் முன்னிலையில் பிரெஞ்சு பெண் ஒருவர் தீக்குளித்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவத்தில் பொலிசார் உட்பட மூவர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் வியாழக்கிழமை காலை லுட்ரியில் நடந்துள்ளது.
குற்றத்தின் போது உள்ளூர் காவல்துறையிலிருந்து இரண்டு அதிகாரிகளும் திவால் நிர்வாகத்தைச் சேர்ந்த மூன்று ஊழியர்களும் அந்த குடியிருப்பில் இருந்தனர் என கூறப்படுகிறது.
இது தொடர்பில் Vaud மாநில பொலிசார் வெளியிட்ட தகவலில், சுமார் 10 மணியளவில் குறித்த 56 வயது பிரெஞ்சு பெண்மணி குளியலறை சென்றதாகவும், திடீரென்று அவர் தீக்குளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரை மீட்க முயன்ற மூவர் இதில் காயமடைந்துள்ளனர். இதனிடையே தீக்குளித்த அந்த பெண்மணி சம்பவயிடத்திலேயே மரணமடைந்துள்ளார்.
தற்போது இந்த வழக்கு தொடர்பில் மேலதிகமாக விசாரணை முன்னெடுக்கப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தின் போது 65 வயது சுவிஸ் பெண்மணி ஒருவரும் அந்த குடியிருப்பில் உடனிருந்ததாக கூறப்படுகிறது.