உக்ரைனியர்களை வரவேற்கும் பிரித்தானியா: வன்முறையை விதைத்த ரஷ்ய அதிகாரிகளுக்கு மன்னிப்பு இனி இல்லை!
பிரித்தானியாவில் வசிக்கும் உக்ரைனிய குடியிருப்புவாசிகள், ரஷ்யா நடத்திவரும் போரால் அவதிப்படும் உக்ரைனில் உள்ள தங்களின் குடும்ப உறுப்பினர்களை எந்த ஒரு தடையும் இன்றி விரைவாக பிரித்தானியாவிற்கு அழைத்து கொள்ளலாம் என்ன பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.
ரஷ்யா உக்ரைனில் தீவிரமான முழுநீள போரை நடத்தி வருவதால், சுமார் 5 மில்லியன் மக்கள் உக்ரைன் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இதனால் அண்டை நாடுகளில் அகதிகளின் நெருக்கடி அதிகரிக்க கூடும் என்ற அச்சத்தை ஐக்கிய நாடுகள் சபை கடந்த ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் பிரித்தானியாவில் உள்ள உக்ரேனிய கதீட்ரல் சபையின் வழிபாட்டு நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் போரிஸ் ஜான்சன், நன்மைக்கும் தீமைக்கும் இடையே உள்ள வேறுபாடை இதுவரை முழுமையாக கண்டது இல்லை, ஆனால் இப்பொது உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையே நடைபெறம் போரின் மூலம் அதை முழுமையாக கண்டறிந்து உள்ளதாக தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் இந்த கடுமையான காலத்தில் பிரித்தானிய என்றும் தனது புறமுதுகைக்காட்டி திரும்பி செல்லாது எனவும், இந்த போரால் தவித்து வரும் உக்ரைனியர்களின் குடும்பங்கள் பிரித்தானியாவில் வசித்து வந்தால் அவர்கள் தங்களின் உறவினர்களை எந்த ஒரு நிபந்தனைகளும் இன்றி தங்களுடன் இணைத்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த அறிவிப்பிற்கு முன்பே எழுந்த விசா விதிமுறைகளில் தளர்வுகள் வேண்டும் என்ற கோரிக்கையும், ஏற்றுக்கொள்ளப்பட்டு, அனைத்து ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளிலும் எந்த ஒரு புகலிட விண்ணப்பமும் அளிக்காமல் மூன்று ஆண்டுகள் வரை உக்ரைனிய அகதிகள் தங்குவதற்கான திட்டத்தையும் ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார்.
இதை அடுத்து, உக்ரைனிற்கு மனிதாபிமான நிதியாக சுமார் 40 மில்லியன் பவுண்ட்களை பிரித்தானிய வழங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் பிரதமர் போரிஸ் ஜான்சன் உக்ரேனிய கதீட்ரல் சபையில் தொடர்ந்து பேசியபோது, இந்த போரால் ரஷ்யா மக்கள் மீது எந்த ஒரு வருத்தமும் இல்லை, ஆனால் இந்த வன்முறையை நடத்திக்கொண்டு இருக்கும் ரஷ்ய தலைவர்கள் மீது எந்த ஒரு மன்னிப்பிற்கும் வாய்ப்பு இல்லை என தெரிவித்துள்ளார்.