என்ன செவ்வாய் தோஷம் என ஒரு தோஷமே இல்லையா? ஜோதிட நிபுணர் கருத்து
காலகாலமாக செவ்வாய் தோஷம் நாக தோஷம் என பல பேர் தோஷங்களை கூறி அதற்கான பரிகாரங்களையும் கூறுவதை பார்க்க கூடியதாக இருக்கிறது.
அதில் முக்கியமாக பார்க்கப்படுவது செவ்வாய் தோஷம் ஆகும்.
ஏனெனில் செவ்வாய் தோஷம் இருப்பவர்களுக்கு செவ்வாய் கிரகத்தின் எதிர்மறை தாக்கங்கள் இருக்கும் என கருதப்படுகிறது. அதுவும் திருமணத்தின் மீது இந்த தாக்கம் அதிகமாக இருக்கும் என கருதப்படுகிறது.
செவ்வாய் தோஷம் என்றால் என்ன?
ஒவ்வொரு ராசிப்படி குறிப்பிட்ட சில லக்கினங்களில் செவ்வாய் ஆதிக்கம் இருந்தால் அது செவ்வாய் தோஷம் எனப்படும்.
பொதுவாக நவகிரகங்களில் ஒன்றான அங்காரகன் எனப்படும் செவ்வாய் பகவானுக்கு முக்கியத்துவம் அதிகமாக இருக்கின்றது.
செவ்வாய்க்கு ,மங்களன் எனும் ஒரு பெயர் உண்டு.வீட்டில் ஒரு மங்களகரமான நிகழ்ச்சி நடப்பதற்கு செவ்வாயின் பலம் இருக்க வேண்டும் .
இதற்கு உதாரணமாக ஒரு புராண கதை இருக்கிறது.குரு எனப்படும் ப்ரகஸ்பதி(ஜுபிடர் ) நூறு வீதம் சுப கிரகம் ஆகும்.வானத்தில் இருக்கும் மற்ற கிரகங்களுக்கே குருதான் சுப காரியங்களை நடத்துவாராம்.குரு இல்லாத பட்சத்தில் அடுத்து அவற்றை நடத்துவது செவ்வாய் என புராண கதைகள் கூறுகிறது.
இந்த செவ்வாய் பகவான் ஒரு ஜாதகத்தில் லக்கினத்தில் ( 'ல' என ஜாதகத்தில் போட்டிருக்கும்) இருந்து அல்லது சந்திரன், சுக்கிரன் ஆகியவற்றிற்கு 2,4,6,7,8,12 இந்த பாவங்களில் இருக்கும் போது செவ்வாய் தோஷம் எனப்படுகிறது.
செவ்வாய் தோஷம் என்று ஒரு தோஷமே இல்லை
வீரத்தில் சூரியனையே மிஞ்சி நிற்பது செவ்வாய்த்தான்.சூரியன் எலும்புக்கு அதிபதி, செவ்வாய் ரத்தத்திற்கு அதிபதியாகும்.
உடலினுள் ரத்தத்தில் இருக்கும் வீரியமானது செவ்வாய் ஆதிக்கம் உள்ளோருக்கு அதிகம். திருமண பொருத்தம் என பார்க்கும்பொழுது பெண்ணுக்கு எவ்வாறு செவ்வாய்யினால் ரத்தத்தில் வீரியம் இருக்கிறதோ அதே போல ஆணுக்கும் இருந்தால் மட்டுமே அது பொருத்தமானதாக இருக்கும்.
ஆனால் செவ்வாய் தோஷம் என ஒரு தோஷமே இல்லை என கூறுவதற்கு காரணம் என்னவெனில், சூரியன் மற்றும் சந்திரனை தவிர மற்ற எல்லா கிரகத்திற்கும் ராசி வீடு 2 ஆகும்.சுக்கிரன் மற்றும் செவ்வாய் ஒரு ராசி வீட்டில் இருந்தாலோ, சனி செவ்வாய் ஒரு ராசி வீட்டில் இருந்தாலோ,குரு செவ்வாய் ஒரு ராசி வீட்டில் இருந்தாலோ தோஷம் கிடையாது. மொத்தத்தில் செவ்வாய் தோஷம் எனும் ஒரு தோஷமே கிடையாது என்று ஜோதிட நிபுணர்கள் கூறுகின்றார்கள்.