பிரித்தானியாவில் ஏழில் ஒருவர் விலைவாசி உயர்வால் உணவைத் தவிர்க்கிறார்: ஆய்வில் வெளியாகியுள்ள அதிரவைக்கும் தகவல்கள்
ஒருபக்கம் நாடு பிடிக்கும் ஆசையால் சில நாடுகள் போருக்காக பணத்தை எக்கச்சக்கமாக செலவு செய்துகொண்டிருக்கின்றன. மறுபக்கமோ மக்கள் உணவுக்காக கஷ்டப்படுகிறார்கள்.
சில குறிப்பிட்ட நாடுகளை நாம் ஏழை நாடுகள் என்றே இப்போதும் அழைக்கிறோம். அங்கு சரியான உணவில்லை, உடையில்லை, அடிப்படைத் தேவைகளுக்கே மக்கள் கஷ்டப்படுகிறார்கள் என்பதுபோன்ற விடயங்கள் குறித்து பெரும்பாலானோர் அறிந்துவைத்திருக்கிறோம்.
ஆனால், பணக்கார நாடுகள் என அறியப்படும் நாடுகளையும் விலைவாசி வாட்டி வதைப்பது குறித்த செய்திகள் தற்போது தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளன.
பிரித்தானியாவில் இப்படி ஒரு நிலையா?
தற்போது, பிரித்தானியாவிலும் விலைவாசி உயர்வால் மக்கள் அவதியுறுவதைக் குறித்த செய்திகள் வெளியாகியுள்ளன.
பல நாடுகளைப் போல, அரசியல்வாதிகளும் செல்வந்தர்களும் மட்டும் எந்த கவலையுமின்றி வாழ்ந்துவருகிறார்கள்.
இப்போதும், உலகம் முழுவதும் சுற்றிக்கொண்டு ஆடம்பர ஹொட்டல்களில் தங்கிக்கொண்டு செலவு செய்துகொண்டிருப்பவர்கள் இருக்கும் அதே நேரத்தில், பிரித்தானியாவில் விலைவாசி காரணமாக உணவைத் தவிர்ப்பவர்கள் இருக்கிறார்கள் என ஆய்வு ஒன்றின் முடிவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தும் தகவல்களைத் தெரிவித்துள்ளன.
உணவைத் தவிர்ப்பவர்கள்
அவ்வகையில், பிரித்தானியாவில் ஏழில் ஒருவர், அதாவது 15 சதவிகித பிரித்தானியர்கள், சில வேளை உணவைத் தவிர்க்கிறார்களாம். இந்த நிலை முந்தைய மாதங்களை விட மோசமாகியுள்ளது.
பத்தில் ஒருவர், அவர் தாயாக இருக்கலாம், அல்லது தந்தையாக இருக்கலாம், தனது குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் சாப்பிடுவதற்காக, இவர்கள் உணவைத் தவிர்க்கிறார்களாம்.
West Suffolkஐச் சேர்ந்த Jackie Rudd (72), மின்சார கட்டணம் போன்ற ஆற்றல் கட்டணங்கள் அதிகரித்துள்ளதால் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை சாப்பாட்டைத் தவிர்க்கிறாராம்.
அடிப்படை உணவுப்பொருட்களின் விலையே எக்கச்சக்கமாக ஏறிவிட்டது என்று கூறும் Jackie , வழக்கமாக நான் வாங்கும் பாணின் அளவு குறைந்துவிட்டது, ஆனால் விலை மட்டும் உயர்ந்துள்ளது என்கிறார்.
உணவுக்காக வீட்டை வெப்பப்படுத்துவதைத் தவிர்ப்பவர்கள்
பத்தில் ஏழு பேர், அதாவது 72 சதவிகிதத்தினர் வீட்டை வெப்பப்படுத்துவதை குறைத்துக்கொள்கிறார்களாம். பத்தில் நான்கு பேர், அதாவது 39 சதவிகிதம் பேர் சுடுதண்ணீர் பயன்படுத்துவதைக் குறைத்துக்கொண்டிருக்கிறார்களாம். ஐந்தில் ஒருவர், அதாவது 19 சதவிகிதம்பேர், உணவு சமைப்பதைக் குறைத்துக்கொண்டுள்ளார்களாம்.
பத்தில் மூன்று பேர், வீட்டை குறைவாக வெப்பப்படுத்துகிறார்களாம், அதனால், அசௌகரியமாக உணர்ந்தவண்ணமே வாழ்கிறார்களாம்.
வீட்டை வெப்பப்படுத்துவதற்கான செலவு அதிகமாகிவிட்டதால், நான் ஒன்றின் மேல் ஒன்றாக பல சட்டைகளை அணிந்து சமாளிக்க முயற்சிக்கிறேன், வீட்டை வெப்பப்படுத்துவதை குறைத்து பணம் மிச்சம் பிடிப்பதால் சாப்பாட்டுக்குப் பணம் கிடைக்கிறது என்கிறார் 85 வயது முதியவர் ஒருவர்.
இதுபோக, சுமார் 2.3 மில்லியன் வீடுகள், வாடகை, கிரெடிட் கார்டு கட்டணம் போன்ற முக்கியமான கட்டணங்களை கடந்த மாதம் செலுத்தவில்லையாம்.
பிரித்தானியாவிலேயே இந்த நிலைமையா? நினைத்துப்பார்க்கவே பயமாகத்தான் இருக்கிறது...
Thanks for championing this campaign @MartinSLewis. @Jeremy_Hunt and @grantshapps please make it official - you can halt the anxiety of #Disabled people facing much higher bills.
— Leonard Cheshire (@LeonardCheshire) March 3, 2023
For high energy users, a 20% rise would mean £700+ on bills. https://t.co/TOhIA4fIKC