பிரித்தானியாவில் சாதனை எண்ணிக்கையில் பணியாற்றும் புலம்பெயர் மக்கள்: பிரதமர் சொன்ன விடயம்
பிரித்தானியாவில் 7 மில்லியன் புலம்பெயர் மக்கள் பணியாற்றி வருவதாக ஆய்வறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
குறைவான ஊதியத்தில்
கடந்த பத்தாண்டுகளில் மட்டும் இந்த எண்ணிக்கை 2 மில்லியன் அதிகரித்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இதில் கோவிட் பெருந்தொற்று பரவியபோது பிரித்தானியாவுக்குள் நுழைந்த ஐரோப்பியரல்லாதவர்கள் 1.4 மில்லியன் மக்களும் உட்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் பிறந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 230,000 சரிவடைந்து தற்போது 2.2 மில்லியன் என பதிவாகியுள்ளது.
பிரித்தானிய வணிக நிறுவனங்கள் மிகவும் குறைவான ஊதியத்தில் வெளிநாடுகளில் இருந்து ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவது அதிகரித்துள்ளதே இதற்கு முதன்மையான காரணம் என கூறுகின்றனர்.
ஆனால், மிகவும் திறமையான தொழிலாளர்கள் மற்றும் அதிக ஊதியம் வழங்கும் நிறுவனங்கள் என்ற சூழலை உருவாக்க வேண்டும் என்றால், இப்படியான நிலையில் மாற்றம் வேண்டும் என்றும் சில நிபுணர்கள் வாதிட்டுள்ளனர்.
பணியிட பயிற்சி இல்லை
7 மில்லியன் புலம்பெயர் மக்கள் பிரித்தானியாவில் பணியாற்றுவதாக கூறுவது மிக மிக அதிகம் என்றும், இந்த எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் ஸர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
முன்னர் ஒருமுறை, பிரித்தானிய இளைஞர்களுக்கு போதுமான பணியிட பயிற்சி இல்லாததால் புலம்பெயர்ந்தோர் மீது அதிக நம்பிக்கை வைக்கும் சூழல் இருந்தது என்றே பிரதமர் விளக்கமளித்திருந்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |