இங்கிலாந்தில் ஒரே அறையில் ஏழு பேர் கொல்லப்பட்டுக் கிடப்பதாக பொலிசாருக்கு கிடைத்த தகவலால் பெரும் பரபரப்பு
இங்கிலாந்தில், ரிசார்ட் ஒன்றில், ஒரே அறையில் ஏழு பேர் கொல்லப்பட்டுக் கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, ஐந்து பொலிஸ் கார்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தன.
ஒரே அறையில் ஏழு பேர் கொல்லப்பட்டுக் கிடப்பதாக தகவல்
புதன்கிழமை இரவு, இங்கிலாந்தின் Lincolnshireஇலுள்ள St Leonards ரிசார்ட்டில், ஒரு அறையில் ஏழு பேர் தரையில் கொல்லப்பட்டுக் கிடப்பதாகவும், கொலையாளி நீண்ட அங்கி தரித்த ஒரு நபர் என்றும், அவர் தரையில் கிடக்கும் உடல்களைச் சுற்றி நடப்பதாகவும், இது ஏதோ நம்பிக்கை சார்ந்த விடயம் போல் தோன்றுவதாகவும், பொலிசாருக்கு சிலர் தகவல் அளித்துள்ளனர்.
MILLIE LAWS
தகவல் கிடைத்ததும், பொலிசார் ஐந்து கார்களில் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.
தெரியவந்த உண்மை
ஆனால், சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிசாருக்கு பெரும் ஏமாற்றம் காத்திருந்தது. விடயம் என்னவென்றால், அந்த ரிசார்ட்டின் ஒரு அறையில் யோகா வகுப்புகளை நடத்திவருகிறார் Millie Laws (22) என்னும் இளம்பெண்.
MILLIE LAWS
அங்கு யோகா கற்க வந்த ஏழு பேர், தரையில் போர்வை விரித்து படுத்தபடி, கண்கள் மூடியிருக்க, ரிலாக்ஸ் செய்யும் பயிற்சியை மேற்கொண்டுள்ளனர்.
அப்போது, நாய்களை அழைத்துக்கொண்டு வாக்கிங் வந்த ஒரு தம்பதியர், சுற்றிலும் கண்ணாடி பொருத்தப்பட்டிருந்த அந்த அறையை தற்செயலாக கவனித்துள்ளார்கள்.
ஏழு பேர் தரையில் கிடக்க, நீண்ட அங்கி அணிந்த ஒருவர் சுற்றி வர, அறையில் வெறும் மெழுகுவர்த்திகளே எரிந்துகொண்டிருந்ததால், உள்ளே என்ன நடக்கிறது என்பது சரியாகத் தெரியாத நிலையில், பொலிசாரை அழைத்துள்ளார்கள் அவர்கள்.
MILLIE LAWS
அவர்கள் உண்மையாகவே அக்கறையுடன் நல்ல நோக்கத்தில்தான் தங்களை அழைத்துள்ளார்கள் என்று கூறியுள்ள பொலிசார், யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை, எல்லோரும் நலமாகவே உள்ளார்கள் என்று கூறியுள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |