2030ஆம் ஆண்டில் பிரித்தானியாவிலுள்ள இந்த 7 மாகாணங்களில் தண்ணீர் இருக்காது
பிரித்தானியாவில் 2030ஆம் ஆண்டிற்குள் பெரும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என்றும், குறிப்பிட்ட 7 மாகாணங்களில் தண்ணீர் இல்லாமல் போகலாம் எனவும் சுற்றுசூழல் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
தண்ணீர் பற்றாக்குறை
பிரித்தானியாவில் குறிப்பிட்ட சில மாகாணங்களில், தண்ணீர் இல்லாத சூழல் உண்டாகும் என சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
@getty images
பிரித்தானிய சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் வரும் ஆண்டுகளில், பிரித்தானியா பெரும் தண்ணீர் பற்றாக்குறையை சந்திக்கும் என தெரிவித்துள்ளனர். மேலும் இந்த நிலை வரும் 2040ஆம் ஆண்டுகளில் இன்னும் இரட்டிப்பாகும் என எதிர்ப்பாக்கப்படுகிறது.
பிரித்தானியாவில் நீண்ட காலமாக தொடர்ந்து தண்ணீர் பிரச்சினை ஏற்படுகிறது, நாட்டின் சில பகுதிகள் குளிர்காலம் மற்றும் கடந்த கோடைக்காலம் முழுவதும் வறட்சி ஏற்பட்டுள்ளது.
தொடரும் வறட்சி
கிழக்கு ஆங்கிலியா மற்றும் டெவோன், கார்ன்வால் மற்றும் சில்லி தீவுகள் போன்ற மாகாணங்களில் அதீத வறட்சி நிலவி வருகிறது. மேலும் நாட்டின் பெரும்பாலான பகுதியில் சமீபமாக வறண்ட வானிலை சிறிது மாற்றமடைந்திருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளன.
@getty
இந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில், பிரித்தானியாவின் சில மாகாணங்களில் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளதாக தேசிய வறட்சி குழு எச்சரித்துள்ளது.
இந்நிலையில் பொருளாதார ஆலோசனை நிறுவனமான Cebr2 உடன் இணைந்து, B&Q மற்றும் Screwfix இன் உரிமையாளரான Kingfisher இன் புதிய ஆராய்ச்சி நிறுவனம், பிரித்தானியாவில் அதிகரித்து வரும் தண்ணீர் பற்றாக்குறையை விவரித்துள்ளது.
வறட்சி மிகுந்த மாகாணங்கள்
அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு மிட்லாண்ட்ஸ், லண்டன், தென்மேற்கு பகுதிகள், கிழக்கு மிட்லாண்ட்ஸ் , பிரித்தானியாவின் கிழக்கு பகுதி மற்றும் தென் கிழக்கு பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
@Kingfisher plc
பிரித்தானியாவின் நீர் பிடிப்பு தன்மையில் ஏற்பட்டால், மேற்கூறிய அனைத்து மாகாணங்களும், கடுமையான பாதிப்பை சந்திக்கும் சூழல் உருவாகியுள்ளது.
ஆனால் ஓப்பீட்டிளவில் வடமேற்கு, வடகிழக்கு மற்றும் யார்கூயர் மற்றும் ஹம்பர் ஆகிய பகுதிகள் அனைத்தும் வரும் 2040ஆம் ஆண்டுக்குள் பற்றாக்குறையால் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2030ஆம் ஆண்டிற்கான நீர்நிலைகளின் நிலை, 2040ஆம் ஆண்டில் இன்னும் மோசமாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது 17 மாகாணங்களில் 12ல் தண்ணீரில் இல்லாத சூழல் உண்டாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.