நள்ளிரவில் தனுஷ்கோடிக்கு வந்த 7 இலங்கை தமிழர்கள்
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருவதன் காரணாமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடியில் தஞ்சமடைந்துள்ளனர்.
இலங்கை தமிழர்கள் தஞ்சம்
பொருளாதார நெருக்கடி காரணாமாக இலங்கையில் இருந்து படகுகள், தோணிகள் மூலம் ஆபத்தை அறியாமல் குடும்பத்தோடு கடலில் பயணம் செய்து தமிழ்நாட்டிற்கு வருகின்றனர்.
இந்நிலையில், இலங்கை யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தில் உள்ள இலங்கைத் தமிழர்கள் 7 பேர் நள்ளிரவில் தனுஷ்கோடிக்கு கள்ளத்தோணியில் வந்துள்ளனர்.
4 வயது பெண்குழந்தை உட்பட 7 பேர் மன்னார் துறைமுகத்திலிருந்து நேற்று இரவு புறப்பட்டு நள்ளிரவில் தனுஷ்கோடிக்கு வந்துள்ளனர். இது சம்மந்தமாக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று மெரைன் பொலிஸ் விசாரணை நடத்தினர்.
பின்னர், அங்கிருந்து மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. அவர்களிடம் நடத்திய விசாரணையில், பொருளாதார நெருக்கடி காரணமாகவும், அத்தியாவசிய பொருள்களின் விலை ஏற்றம் காரணமாகவும் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளதாக கூறினர்.
இலங்கையில் ஏற்பட்ட போரின் போது பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது உடைமைகளை இழந்து, உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக 1983 -ம் ஆண்டு முதல் படகுகளில் அகதிகளாக தமிழ்நாட்டிற்கு வந்தனர்.
இவர்கள், பெரும்பாலும் அகதிகளாகவே தமிழ்நாட்டில் தங்கவைக்கப்பட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், சில வசதி படைத்தவர்கள் விமானம் மூலமும் வந்ததாகவும் கூறப்படுகிறது.
Representative image
அதாவது, 1983 முதல் 2010 -ம் ஆண்டு வரை அகதிகளாக வந்துள்ளனர். அந்த நிலைமை 40 ஆண்டுகளாக தற்போது வரை நீடித்து வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |