12 நாட்களில் நிர்மானிக்கப்பட்ட ஏழு மாடி ஹோட்டல் !
சீனாவில் 12 நாட்களில் ஏழு மாடி ஹோட்டல் ஒன்று நிர்மானம் செய்யப்பட்டு சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது. சீனாவின் Zhuhai நகரில் இந்த ஏழு மாடி கட்டிடம் உருவாக்கப்பட்டுள்ளது.
சீன அரச கட்டுமான நிறுவனத்தினால் இந்த ஹோட்டல் நிர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், maximal information coefficient (MIC) technology என்ற தொழில்நுட்பம் இதற்காக பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கட்டிடத்தின் மரபு ரீதியான கட்டுமான தொழில்நுட்பங்களின் 80 வீதமானவை தானியங்கி மதிநுட்ப உற்பத்திசாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே கட்டுமானத்தின் தரமும் துல்லியத்தன்மையும் உறுதி செய்யப்பட்டது என நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம் சக்தி வள விரயம், கட்டுமான விரயங்களை வரையறுத்துக் கொள்ள முடியும் என நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்வாறு நிர்மானம் செய்யப்படும் கட்டிடங்களின் பாகங்கள் தேவை ஏற்பட்டால் அந்த இடத்திலிருந்து அகற்றி வேறும் ஓர் இடத்திலும் நிர்மானிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
கோவிட்பெருந்தொற்று ஆரம்பமான காலப் பகுதியில் சீனாவில் ஓரே நாளில் ஆயிரம் படுக்கைகளை உடைய 25000 சதுர மீற்றர் அளவான வைத்தியசாலை ஒன்றை சீனா நிர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.