ஆறு நாட்களில் ஏழு உலக அதிசயங்கள்: பிரித்தானியரின் கின்னஸ் உலக சாதனை
ஆறே நாட்களில் ஏழு உலக அதியங்களையும் பார்வையிட்டு கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார் பிரித்தானியர் ஒருவர்.
ஆறு நாட்களில் ஏழு உலக அதிசயங்கள்
சாகச விரும்பியான பிரித்தானியர் Jamie McDonald, ஆறே நாட்களில், ஏழு உலக அதியங்களையும் பார்வையிட்டு கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். அதுவும், பொதுப்போக்குவரத்தை மட்டுமே பயன்படுத்தி இந்த பயணத்தை முடித்துள்ளார் அவர்.
Image: Supplied
ஆறு நாட்களில், சீனப் பெருஞ்சுவர், தாஜ்மஹால், Petra, the Colosseum, Christ the Redeemer, Machu Pichu மற்றும் Chichén Itzá என்னும் ஏழு அதிசயங்களையும் பார்வையிட்டுள்ளார் Jamie.
Image: Supplied
இந்த பயணத்தின்போது, Jamie, நான்கு கண்டங்கள், ஒன்பது நாடுகள் வழியாக, 13 விமானங்களில் பறந்து, ஒன்பது பேருந்துகள், 16 டெக்சிகளில் சாலையில் பயணித்து, நான்கு ரயில்கள், ஒரு toboggan என்னும் சறுக்கு வாகனம் ஆகியவற்றில், ஆறு நாட்கள், 16 மணி நேரம், 14 நிமிடங்களில் 22,856 மைல் தூரத்தைக் கடந்துள்ளார்.
Image: Supplied
தூக்கமோ குளியலோ கூட கிடையாது
இந்த சாகசப் பயணத்தின்போது Jamie மொத்தம் 12 மணி நேரம் மட்டுமே தூங்கியுள்ளார். குளித்தால் நேரம் வீணாகும் என்பதால், குளிக்காமல் ஆஃப்டர் ஷேவ் லோஷனை மேலே ஊற்றிக்கொண்டு பயணித்தாராம் Jamie!
Image: Supplied
சிறுபிள்ளையாக இருக்கும்போது, syringom என்னும் அபூர்வ முதுகுத்தண்டு பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்தாராம் Jamie. அவரால் நடக்க இயலாமல் போகலாம் என மருத்துவர்கள் எச்சரித்திருந்தார்களாம்.
Image: Supplied
ஆகவே, Superhero Foundation என்னும் தொண்டு நிறுவனத்துக்காக தனது பயணத்தின் மூலம் நிதியும் திரட்டுவது Jamieயின் நோக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
Image: Supplied