தென்னந்தோப்பில் சடலமாக கிடந்த 70 வயது மூதாட்டி! கைது செய்யப்பட்ட இளைஞன்.. விசாரணையில் பகீர் தகவல்
தமிழகத்தில் 70 வயது மூதாட்டியை வன்கொடுமை செய்து கொலை செய்த இளைஞனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் கம்பம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தென்னந்தோப்பில் கடந்த 8ஆம் திகதி அடையாளம் தெரியாத, 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி படுகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார் உயிரிழந்த மூதாட்டி யார் என்றும், எதற்காக கொலை செய்யப்பட்டார் எனவும் விசாரணை மேற்கொண்டனர்.
இதனிடையே மூதாட்டி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது.
இதனையடுத்து பொலிசார் ஞாநேசன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, மதுபோதையில் அவர் மூதாட்டியை தூக்கி சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதும், சம்பவம் வெளியே தெரியாமல் இருக்க மூதாட்டியின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து உயிரிழந்த மூதாட்டி யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.