ஜேர்மனியில் விமானங்கள் ரத்து, போக்குவரத்து பெருமளவு பாதிப்பு
தீவிர குளிர்கால வானிலை ஜேர்மனியில் பெரும் இடையூறுகளை ஏற்படுத்தியது.
ஞாயிற்றுக்கிழமை, பிராங்க்பர்ட் விமான நிலையத்தில் திட்டமிடப்பட்ட 1,090 விமானங்களில் 120 ரத்து செய்யப்பட்டது.
ம்யூனிக் விமான நிலையமும் பனியை அகற்றும் பணிகள் காரணமாக ஒரு ஓடுதளம் மட்டுமே செயல்பட்டது.
முன்னெச்சரிக்கையாக, ம்யூனிக் விமான நிலையம் சனிக்கிழமை 35 விமானங்களை ரத்து செய்தது.
ஞாயிற்றுக்கிழமை 750 விமானங்கள் தள்ளிவைக்கப்பட்டன. ஸ்டுட்கார்ட் விமான நிலையத்தில் பனியை அகற்றும் பணிகள் மேலும் நீண்டன.
கோலோனில் இரவும் காலை பொழுதிலும் 10 செ.மீ அளவில் புது பனி பெய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் சில சாலைகள் பனி மூடிய நிலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் இருந்தன.
பாதுகாப்பு எச்சரிக்கை
ஜேர்மனியின் வானிலை சேவை நிர்வாகம் கடுமையான பனி எச்சரிக்கை விடுத்துள்ளது. பொது மக்கள் தங்கள் வீடுகளில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
இந்த கடுமையான குளிர்கால நிலை உலகளாவிய பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் பெரும் சவாலாக மாறியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |