ஜேர்மனிக்கருகில் இரண்டு கப்பல்கள் மோதி விபத்து: பலர் மாயமாகியுள்ளதால் பெரும் பரபரப்பு
ஜேர்மனிக்கு அருகில், வட கடல் பகுதியில், இன்று காலை இரண்டு சரக்குக் கப்பல்கள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரு கப்பல் மூழ்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜேர்மனிக்கருகில் இரண்டு கப்பல்கள் மோதி விபத்து
இன்று அதிகாலை நிகழ்ந்த இந்த துயர சம்பவத்தில், Polesie மற்றும் Verity என்னும் இரண்டு கப்பல்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில், Verity கப்பல் மூழ்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
பிரித்தானிய சரக்குக் கப்பலான Verity, ஜேர்மனியின் Bremen என்னுமிடத்திலிருந்து, இங்கிலாந்திலுள்ள Immingham துறைமுக நகரம் நோக்கி பயணித்துக்கொண்டிருக்க, Polesie என்னும் பஹாமாஸ் நாட்டுக் கப்பல், ஜேர்மனியின் ஹாம்பர்கிலிருந்து, ஸ்பெயினிலுள்ள La Coruna துறைமுகம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்திருக்கிறது.
காணாமல் போனவர்களைத் தேடும் பணி
இந்த துயரச் சம்பவத்தில் காணாமல் போனவர்களை, ஜேர்மன் ஹெலிகொப்டர் ஒன்றும், அந்த பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த பயணிகள் கப்பல் ஒன்று உட்பட பல கப்பல்களும் தேடிவருகின்றன.
ஒரே ஒருவர் மீட்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாகவும், காணாமல் போன மற்றவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், Polesie கப்பல், 22 பணியாளர்களுடன் இன்னமும் கடலில் மிதந்துகொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |