கனடாவில் கோர சம்பவம்... பாதசாரிகள் மீது பாய்ந்த வாகனம்: பலர் கவலைக்கிடம்
கனடாவின் ரொறன்ரோவில் பாதசாரிகள் மீது வாகனம் பாய்ந்து விபத்தை ஏற்படுத்திய சம்பவத்தில் இருவர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிகிச்சை பலனின்றி மரணம்
குறித்த சம்பவமானது குடியிருப்பு வளாகத்தின் வாகன நிறுத்துமிடத்தில் நடந்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. உள்ளூர் நேரப்படி மதியம் 12.40 மணியளவில் விக்டோரியா பார்க் அவென்யூ மற்றும் கசாண்ட்ரா பவுல்வர்டு பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது.
Martin Trainor/CBC
அவசர மருத்துவ உதவி குழுவினர் தெரிவிக்கையில், தொடர்புடைய விபத்தில் சிக்கியுள்ள மூவர் காயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
இதில், பெண்கள் இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விபத்தை ஏற்படுத்திய சாரதி கைது
மூன்றாவதாக ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும், உயிருக்கு ஆபத்தில்லை என்றே கூறப்படுகிறது. விபத்து தொடர்பில் பொலிசார் தெரிவிக்கையில், பாதசாரிகள் நால்வர் காயங்களுடன் தப்பியதாக குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால் தற்போது நாலாவது நபர் தொடர்பில் தகவல் இல்லை என்றே கூறப்படுகிறது. விபத்தை ஏற்படுத்திய சாரதியை பொலிசார் கைது செய்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |