ஜேர்மனிக்கும் பின்லாந்துக்கும் இடையில் கடலுக்கடியில் செல்லும் கேபிள் துண்டிப்பு: விசாரணை துவக்கம்
ஜேர்மனிக்கும் பின்லாந்துக்கும் இடையில், கடலுக்கடியில் செல்லும் டேட்டா கேபிள் துண்டிக்கப்பட்டுள்ள விடயம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.
ஜேர்மனிக்கும் பின்லாந்துக்கும் இடையில் கடலுக்கடியில் செல்லும் கேபிள் துண்டிப்பு
ஜேர்மனியையும் பின்லாந்தையும் இணைக்கும், பால்ட்டிக் கடலுக்கடியில் செல்லும் கேபிள் ஒன்று துண்டிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளதாக பின்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
அதனால், அந்த கேபிள் வழியாக செல்லும் தகவல் தொடர்பில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
எதனால் இந்த பிரச்சினை ஏற்பட்டது என்பது தெரியாத நிலையில், வானிலை அல்லது கப்பல் போக்குவரத்து காரணமாக அந்த கேபிள் துண்டிக்கப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
என்றாலும், இந்த கேபிள் துண்டிப்பு விடயத்தில் சதி வேலை எதுவும் உள்ளதா என அறிவதற்காக பின்லாந்து அதிகாரிகள் விசாரணை ஒன்றையும் துவக்கியுள்ளார்கள்.
The C-Lion1 cable என அழைக்கப்படும் அந்த கேபிள், பின்லாந்தை மத்திய ஐரோப்பாவுடன் இணைக்கும் ஒரே கேபிள் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |