இலங்கையில் தங்கத்திற்கு திடீர் தட்டுப்பாடு
நாட்டில் தங்கத்திற்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வருவதாக அகில இலங்கை தங்க ஆபரண சங்கம் தெரிவித்துள்ளது. தங்கத்தை இறக்குமதி செய்வதற்கு கடுமையான வரையறைகள் பிறப்பிக்கப்பட்டுள்ள காரணத்தினால் இவ்வாறு தங்கத்திற்கு கடுமையான தட்டுப்பாட்டு நிலைமை உருவாகியுள்ளது.
தங்கத்திற்கான தட்டுப்பாடு காரணமாக தங்க ஆபரணத்துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதுடன் ஆயிரக் கணக்கானவர்கள் தொழில் வாய்ப்புக்களை இழந்துள்ளனர்.
அகில இலங்கை தங்க ஆபரண சங்கத்தின் தலைவர் ஏ.விஜேகுமார் இந்த விடயத்தை ஊடகங்களிடம் நேற்று தெரிவித்துள்ளார். நான்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் தங்கம் இறக்குமதி செய்ய பிறப்பிக்கப்பட்ட வரையறைகள் தொடர்ந்தும் அமுலில் உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு பவுண் தங்கத்தின் விலை 116500 ரூபாவாகவும் செய் கூலியுடன் ஒரு பவுண் நகையை 124000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாகவும் விஜயகுமார் குறிப்பிட்டுள்ளார்.