நடுவானில் வாழ்க்கையை புரட்டிப் போட்ட அந்த சம்பவம்: பிரித்தானிய விமான ஊழியரின் திகில் அனுபவம்
நடுவானில் மிக மோசமாக குலுங்கிய விமானத்தால், பணிப்பெண் ஒருவரின் கால் ஏழாக உடைய, தனது கனவு வேலையை தொலைத்த நிலையில் தற்போது பெருந்தொகை இழப்பீட்டு பெற்றுள்ளார்.
ஆலங்கட்டி மழையில் சிக்கியது
பிரித்தானியாவின் மான்செஸ்டர் பகுதியை சேர்ந்த 31 வயது Eden Garrity என்பவரே தாம் எதிர்கொண்ட அந்த மோசமான அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். ஒவ்வொரு பயணிகளுக்கும் உணவளித்து வந்த வேளையில், அவர் பணியாற்றிய அந்த விமானம் அட்லாண்டிக் மீது வெப்பமண்டல ஆலங்கட்டி மழையில் சிக்கியுள்ளது.
கியூபாவில் இருந்து மான்செஸ்டர் நோக்கி பறந்துகொண்டிருந்த அந்த Thomas Cook விமானமானது சட்டென்று வலுவுடன் 500 அடி மேலே தள்ளப்பட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட Eden Garrity சுயமாக எழுந்திருக்க முடியாமல் சுமார் ஒருமணி நேரம் உதவிக்காக காத்திருந்துள்ளார்.
இதனிடையே 6 பயணிகள் சேர்ந்து அவரை மீட்டுள்ளனர். சம்பவம் நடந்து சுமார் 7 மணி நேரத்திற்கு பின்னர், மான்செஸ்டரில் விமானம் தரையிறங்கிய பின்னர் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அவரது கால் ஏழு பகுதிகளில் உடைந்திருந்தது. அறுவை சிகிச்சைகள் பல முன்னெடுக்கப்பட்டதுடன், தீவிரமான புனர்வாழ்வு சிகிச்சைகளும் அளிக்கப்பட்டது. இரண்டு மாத காலம் நடக்க முடியாமல் போனது.
விமானி எச்சரிக்கை செய்வார்
மட்டுமின்றி, நரம்பு பாதிப்பு ஏற்பட்டதால் நீண்ட நேரம் நிற்பது வேதனையளிப்பதாக மாறியது. அந்த சம்பவத்திற்கு பின்னர் விமான பணிப்பெண் வேலைக்கு செல்ல முடியாமல் போயுள்ளது.
ஆனால் 6 இலக்க இழப்பீடு தொகை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், 2019 ஆகஸ்டு மாதம் நடந்த அந்த விபத்திற்கு பின்னர் அவர் நினைத்ததை அவரால் செய்ய முடியவில்லை என்ற ஆதங்கம் அவரிடம் உள்ளது.
பயணத்தின் போது அவளும் மற்ற குழு உறுப்பினர்களும் விமானம் குலுங்கும் அபாயத்தைப் பற்றி அறிந்திருக்கவில்லை என்றே தெரிவித்துள்ளார்.
பொதுவாக விமானம் குலுங்கும் முன்னர் பயணிகளுக்கும் சக ஊழியர்களுக்கும் திட்டம் என்ன என்பது குறித்து விமானி எச்சரிக்கை செய்வார். ஆனால் அந்த எச்சரிக்கையை மீறி காயங்கள் ஏற்படுவது உண்டு என Eden Garrity தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |