அச்சுறுத்தும் ஆர்க்டிக் பனிவெடிப்பு: பிரித்தானியா முழுவதும் கடும் பனிப்பொழிவு எச்சரிக்கை
பிரித்தானியாவின் பெரும்பாலான பகுதிகளுக்கு கடுமையான குளிர்கால வானிலை எச்சரிக்கையை மெட் அலுவலகம் விடுத்துள்ளது.
கடுமையான குளிர்கால வானிலை எச்சரிக்கை
பிரித்தானியாவின் வானிலை நிலவரங்களுக்கான மெட் அலுவலகம், கடுமையான குளிர்கால வானிலை நிலைமைகளுக்கான 2ம் ஆம்பர் எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.
இதனால் கனத்த பனி மற்றும் பனிக்கட்டி பிரித்தானியாவின் பெரும்பகுதியை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சனிக்கிழமை மாலை 6 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணி வரை நடைமுறையில் உள்ள இந்த எச்சரிக்கை, வேல்ஸ் மற்றும் மத்திய இங்கிலாந்தின் பெரும் பகுதியை உள்ளடக்கியது.
சனிக்கிழமை இரவு 9 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வரை தனித்த பனி எச்சரிக்கை(separate snow warning) வழங்கப்பட்டுள்ளது, இது வடக்கு இங்கிலாந்தின் பெரும் பகுதியை உள்ளடக்கியது.
கடுமையான குளிர்கால வானிலை எச்சரிக்கை காரணமாக குறிப்பிடத்தக்க அளவு பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டு எச்சரிக்கை மண்டலங்களுக்குள் உள்ள உள்ளூர் பகுதிகளில் 30 சென்டிமீட்டர் (12 அங்குலம்) வரை பனிப்பொழிவு ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
⚠️⚠️ Amber weather warning issued ⚠️⚠️
— Met Office (@metoffice) January 3, 2025
Snow across northern England
Saturday 2100 - Sunday 2359
Latest info 👉 https://t.co/QwDLMfRBfs
Stay #WeatherAware ⚠️ pic.twitter.com/v2MKvd2nvJ
வெப்பநிலை -8.1°C (17°F) வரை குறைந்து குளிரான இரவை வழங்கும், மேலும் வரும் வாரம் முழுவதும் ஆர்க்டிக் பனி வெடிப்பு தாக்கம் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சாத்தியமான பாதிப்புகள்
மழை, பனி மற்றும் உறை பனி ஆகியவை மின் தடைகளை ஏற்படுத்தலாம்.
சாலை மூடல்கள் மற்றும் ரயில் மற்றும் விமான போக்குவரத்தில் தாமதங்கள் உட்பட குறிப்பிடத்தக்க போக்குவரத்து பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
பனிப் பொழிவின் காரணமாக சில கிராமப்புற சமூகங்கள் தனிமைப்படுத்தப்படலாம்.
பிபிசி வானிலை முன்னறிவிப்பு, வடக்கு இங்கிலாந்து மற்றும் தெற்கு ஸ்காட்லாந்து முழுவதும் சனிக்கிழமை இரவு முதல் திங்கட்கிழமை வரை 20-40 சென்டிமீட்டர் (7.8-15.7 அங்குலம்) கணிசமான அளவு பனிப்பொழிவு ஏற்படும் என்று கணித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |