இந்த கடற்கரை பகுதிகளை பிரித்தானிய மக்கள் கட்டாயம் தவிருங்கள்: அதிர்ச்சி காரணம்
பலத்த மழை காரணமாக கழிவுநீர் தற்போது கடல் நீரில் கலந்துள்ளதால், பிரித்தானியாவில் டசின் கணக்கான கடற்கரைகளில் மக்கள் நீந்த வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
83 கடற்கரை பகுதிகள்
நதிக்கரைகள் மற்றும் கடற்கரை பகுதிகளில் தஞ்சமடையும் மக்கள், கண்டிப்பாக இந்த எச்சரிக்கையை கருத்தில்கொள்ள வேண்டும் எனவும் நினைவூட்டியுள்ளனர். மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்றவகையில் கடல் நீரின் தரம் இருக்கிறதா என்பது குறித்து தனியார் அமைப்பு ஒன்று கணித்து வருவதுடன், எச்சரிக்கையும் விடுத்து வருகிறது.
இந்த நிலையில், கழிவுநீர் கலந்த நிலையில் பிரித்தானியாவில் 83 கடற்கரை பகுதிகளை அடையாளம் கண்டுள்ளனர். மக்கள் இந்த பகுதிகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதனிடையே, நாட்டிலேயே சிறந்த கடற்கரை பகுதி என கடந்த மாதம் தெரிவான Gorleston கடற்கரையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஏற்றவகையில் தற்போது இல்லை என தெரியவந்துள்ளது.
ஐரோப்பாவிலேயே 12வது சிறந்த கடற்கரை பகுதி இதுவென விளம்பரப்படுத்தியிருந்ததால், இங்கு மக்கள் கூட்டம் அலைமோதியது. யாரே ஆற்றில் கலக்கும் கழிவுநீர் மொத்தமும், தற்போது Gorleston கடற்கரை பகுதியில் கலப்பதாக கூறப்படுகிறது.
இருப்பினும் இந்த கடற்கரை பகுதியானது மக்கள் கூட்டத்தால் நிரம்பியே காணப்படுகிறது. குறித்த பட்டியலில் இடம்பெற்றுள்ள எஞ்சிய கடற்கரை பகுதிகள்: சவுத்எண்ட் ஜூபிலி பீச், ஷீர்னஸ், ஃபோல்ஸ்டோன், டிம்சர்ச், கேம்பர், போக்னர் ரெஜிஸ் மற்றும் கோவ்ஸ்.
பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உகந்ததல்ல
சுற்றுலாப்பயணிகளுக்கு மிகவும் பிடித்தமான பிரைட்டன், பிளாக்பூல் மற்றும் விட்ஸ்டேபிள் கடற்கரை பகுதிகளும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உகந்ததல்ல என எச்சரிக்கப்பட்டுள்ளது.
குளிக்கும் நீரின் தரவரிசையின் அடிப்படையில் கழிவுநீர் மற்றும் விவசாய மாசுபாடு காரணமாக ஐரோப்பாவின் பட்டியலில் பிரித்தானியா அடித்தட்டில் வைக்கப்பட்டுள்ளது.
புதிய ஆய்வுகளின் அடிப்படையில் சுமார் 400,000 கழிவுநீர் ஓடைகள் பிரித்தானியாவில் உள்ள நதிகளில் கலப்பதாகவும், சுமார் 5,500 கழிவுநீர் ஓடைகள் கடற்கரை பகுதிகளில் கலப்பதாகவும் தெரியவந்துள்ளது.
குறிப்பிட்ட இந்த பகுதிகள் அனைத்தும் பொதுமக்கள் பயன்பாட்டில் இருக்கும் பகுதிகள் என்றே ஆய்வில் தெரியவந்துள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.