சுவிட்சர்லாந்தில் சாக்கடை நீரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு: கொரோனா தொடர்பில் தெரியவந்துள்ள உண்மை
சுவிட்சர்லாந்தில் சாக்கடை நீரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், டெல்டா வகை கொரோனா வைரஸ் தொடர்ந்து அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது. தற்போது, சூரிச் மற்றும் Lausanneஇல் இந்த ஆய்வை பெடரல் பாலிடெக்னிக்குகள் நடத்தி வருகின்றன.
சுவிட்சர்லாந்து முழுவதிலும், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் தொடர்ச்சியாக நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அவற்றில், சூரிச்சில் எடுக்கப்பட்ட மாதிரிகளில் 33 சதவிகித மாதிரிகளிலும், பெர்லினில் எடுக்கப்பட்ட மாதிரிகளில் பாதியிலும் டெல்டா வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மற்ற பகுதிகளில் டெல்டா வகை கொரோனா வைரஸ் குறைவாகவே உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
மே 20க்கு முன்பு, சுவிட்சர்லாந்தில் டெல்டா வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.