கனடா வரலாற்றில் முதல் முறையாக சங்கம் அமைத்த பாலியல் தொழிலார்கள்!
கனடாவில் முதல் முறையாக பாலியல் தொழில் மற்றும் பாலியல் தொழிலாளர்களை ஆதரிக்கும் அமைப்பு நாட்டின் தொழிலாளர் சங்கத்தில் இணைக்கப்பட்டது.
கனடாவில் 1986-ஆம் ஆண்டு முதல், பாலியல் தொழில் மற்றும் பாலியல் தொழிலாளர்களை ஆதரிக்கும் அமைப்பாக மேகிஸ் (Maggie's) இயங்கி வருகிறது.
தலைநகர் ரொறண்ரோவை தளமாகக் கொண்ட இந்த பழமையான பாலியல் தொழிலாளர் அமைப்பானது, தற்போது கனேடிய பொது ஊழியர் சங்கத்தின் (CUPE) கீழ் இணைக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, நாட்டில் ஒன்றிணைக்கப்பட்ட முதல் பாலியல் தொழிழாளர் அமைப்பாக மேகிஸ் மாறியுள்ளது.
மேகிஸ் அமைப்பின் தொழிற்சங்க முயற்சிகளுக்கு தலைமை தாங்கிய ஒரு வெளி ஊழியரான ஜாஸ்ஸி ஜஸ்டிஸ் (Jassie Justice), "தொழிற்சங்கமாக இணைப்பது ஊழியர்களுக்கு இனவெறி, டிரான்ஸ்போபியா, குறைந்த ஊதியம் மற்றும் ஊழியர்களுக்கு மிகக் குறைவான வேலை நேரங்களை உறுதியாக உரையாற்ற அனுமதிக்கிறது" என்றார்.
தொழிற்சங்கம் மேகியின் ஊழியர்களை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்தினாலும், கனடா முழுவதும் உள்ள பாலியல் தொழிலாளர்கள் இந்த நடவடிக்கை நாடு தழுவிய போக்கைத் தூண்டும் என்று நம்புகிறார்கள்.
மற்ற தொழிலாளர்களை போலவே, பாலியல் தொழிலாளர்களுக்கும் அவர்களது உரிமைகளை தக்கவைத்துக்கொள்ள இந்த தொழிற்சங்கம் பெரும் உதவியாக இருக்கும் என நம்பப்படுகிறது.