அவர்களால் வீட்டைவிட்டு வெளியே செல்ல முடியவில்லை... சிவப்பு விளக்கு மாவட்டமாக்கி விட்டார்கள்: குமுறும் மக்கள்
தெருக்களில் பயன்படுத்தப்பட்ட ஆணுறை உள்ளிட்ட குப்பைகளால் நடமாடவும் முடியாமல் உள்ளது
தெருவோர விபச்சாரம் இப்பகுதியில் அதிகரித்து வரும் பிரச்சினையாக மாறி வருகிறது
பிரித்தானியவின் நாட்டிங்ஹாம் புறநகர் பகுதி மக்கள், இரவில் தங்களால் வீட்டில் இருந்து வெளியே செல்ல முடியாத இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
நாட்டிங்ஹாம் புறநகர் பகுதியில் சிவப்பு விளக்கு மாவட்ட விரிவாக்கத்திற்கு பின்னரே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். நாட்டிங்ஹாம் பகுதியின் Forest Road West-ல் பொதுவாக விலைமாதர்கள் நடமாட்டம் அதிகம் காணப்படும்.
Image: Olimpia Zagnat/MEN
ஆனால் தற்போது Hyson Green பகுதிக்கு அருகாமையில் வசிக்கும் மக்கள், தங்களால் இரவில் தூங்க முடியவில்லை எனவும், தெருக்களில் பயன்படுத்தப்பட்ட ஆணுறை உள்ளிட்ட குப்பைகளால் நடமாடவும் முடியாமல் உள்ளது என்கிறார்கள்.
பொலிசாருக்கு புகார் அளித்தும் எந்த பயனும் இல்லை என கூறும் இப்பகுதி மக்கள், குடியிருப்பாளர்களையே விலைமாதர்கள் நெருங்கும் நிலையும் உள்ளது என்கிறார்கள். வார இறுதி நாட்களில் வாடகை டாக்ஸி சாரதியாக பணியாற்றும் Latif Sajad கூறுகையில்,
தெருவோர விபச்சாரம் இப்பகுதியில் அதிகரித்து வரும் பிரச்சினையாக மாறி வருகிறது என்றார். பலமுறை தம்மையும் விலைமாதர்கள் அணுகியதாக அவர் கூறியுள்ளார். இதுவும் ஒருவகை தொழில் தான் என விலைமாதர்கள் தம்மிடம் கூறியுள்ளதாக Latif Sajad தெரிவித்துள்ளார்.
Image: Olimpia Zagnat/MEN
பலர் தங்கள் கார்களில் வந்து இப்பகுதியில், குறித்த பெண்களை நாடுவதாகவும் Latif Sajad குறிப்பிட்டுள்ளார். பல காலமாக குடியிருந்து வந்த இப்பகுதி தற்போது சிவப்பு விளக்கு மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளது அதிர்ச்சியாக் உள்ளது என கூறும் Madar Zaman என்பவர்,
இரவு நேரங்களில் அவசரத்திற்கு கூட வெளியே செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது என்றார். மாலை நேரம் வந்துவிட்டால், வீட்டில் இருந்து வெளியே செல்வதை தவிர்ப்பேன் என கூறும் எவர், ஏன் வீணாக பிரச்சனையில் சிக்க வேண்டும் என கேள்வி எழுப்பினார்.
இதனிடையே, பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த விவகாரமும் கண்டிப்பாக தீவிர நடவடிக்கைக்கு வழிவகுக்கும் என நாட்டிங்ஹாம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.