விசித்திராவிற்கு முன்பே பிரபல நடிகை பகிர்ந்த பகிர் குற்றசாட்டு: பாலகிருஷ்ணாவுக்கு தொடரும் எதிர்ப்புகள்
பிக்பாஸ் இல்லத்தில் நடிகை விசித்ரா தனக்கு நேர்ந்த பாலியல் சீண்டல் குறித்துப் பகிர்ந்து கொண்ட நிலையில், அதற்கு முன்னதாகவே நடிகை ராதிகா ஆப்தேவும் இதுபோன்ற தனக்கு நேர்ந்த பாலியல் சீண்டல் குறித்து கூறியிருக்கிறார்.
Bigg Boss Season 7
பிக்பாஸ் இல்லத்தில் தற்போது போட்டியாளர்கள் தங்கள் வாழ்வை அசைத்துப் பார்த்த ஒரு விஷயம் குறித்து பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது.
இதில் நடிகை விசித்ரா படப்பிடிப்புத் தளத்தில் தெலுங்கு முன்னணி நடிகர் ஒருவரால் தனக்கு நேர்ந்த பாலியல் அத்துமீறல் குறித்துப் பகிர்ந்து கொண்டார்.
அவர் பகிர்ந்து கொண்ட சம்பவங்களின் அடிப்படையில் அது தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாதான் என ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். அவருக்கு எதிர்ப்பும் தற்போது கிளம்பி வருகிறது.
இதனை அடுத்து தான் பாலகிருஷ்ணாவுடன் ஒரு படம் நடித்தபோது, அவர் தன்னிடம் அத்துமீறி நடந்து கொண்டதை நடிகை ராதிகா ஆப்தே முன்னதாகவே பகிர்ந்திருக்கிறார்.
ராதிகா ஆப்தே கூறியதாவது
இது பற்றி ராதிகா ஆப்தே, “நான் ஷூட்டிங் சென்ற முதல் நாளே என்னை பார்த்ததும் என் காலை அந்த டாப் ஹீரோ தட்டிவிட்டு சென்றார். அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உடனே எழுந்து அந்த இடத்திலேயே அவரை திட்டினேன். இனி ஒருபோதும் இப்படி செய்யக்கூடாது என அத்தனை ஜூனியர் ஆர்டிஸ்ட் முன்பும் வார்னிங் கொடுத்தேன்.
அதுமட்டுமின்றி தெலுங்கு திரையுலகம் ஆணாதிக்கம் நிறைந்தது. அங்கு ஹீரோக்களை கடவுள் போல பார்க்கிறார்கள்.
ஒருமுறை ஹீரோ ஒருவர் என்னை அழைத்து, முதுகு தேய்த்துவிட வேண்டும் என்றால் எப்போது வேண்டுமானாலும் ரூமுக்கு கூப்பிடு வருகிறேன் என்று சொன்னார் என ராதிகா ஆப்தே கூறி இருக்கிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |