சிக்ஸர் மழைபொழிந்த இருவர்! துவம்சமான ஸ்டீவ் ஸ்மித் அணி
மேஜர் லீக் தொடரில் சான் ஃபிரான்சிஸ்கோ யுனிகார்ன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வாஷிங்டன் ஃப்ரீடம் அணியை வீழ்த்தியது.
டல்லாஸில் நடந்த போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான வாஷிங்டன் ஃப்ரீடம் மற்றும் கோரி ஆண்டர்சனின் சான் ஃபிரான்சிஸ்கோ யுனிகார்ன்ஸ் அணிகள் மோதின.
முதலில் களமிறங்கிய வாஷிங்டன் அணியில் டிராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித் இருவரும் அதிரடியில் மிரட்டினர். இதன்மூலம் 10வது ஓவரில் அந்த அணி 100 ஓட்டங்களை எட்டியது.
ஸ்மித் 31 பந்துகளில் 4 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 56 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதனைத்தொடர்ந்து கோரி ஆண்டர்சன் ஓவரில் ஹெட் அவுட் ஆனார். அவர் 36 பந்துகளில் 3 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 56 ஓட்டங்கள் எடுத்தார்.
A Royal fantastic 5️⃣0️⃣ for Steve Smith! He just seems unstoppable at the moment 🔴 #MLC2024 | #CognizantMajorLeagueCricket | #T20 | #AuthenticRoyalFoods pic.twitter.com/wQNtqozeP6
— Major League Cricket (@MLCricket) July 23, 2024
அடுத்து வந்த ரச்சின் ரவீந்திரா 6 பந்தில் 16 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் ஆனார். அன்ரிஸ் கோஸ் 29 (20) ஓட்டங்கள் எடுத்திருந்தார்.
The Captain sets the tone 👏 for his team tonight - knocking up 51 runs from 25 balls! They're off and running, Washington Freedom! #MLC2024 | #CognizantMajorLeagueCricket | #T20 | #RoyalFantasticFifty | #WFvSFU pic.twitter.com/yeavf20k4X
— Major League Cricket (@MLCricket) July 23, 2024
அணியின் ஸ்கோர் 174 ஆக இருந்தபோது மழையால் பாதிக்கப்பட்டது. இதனால் சான் ஃபிரான்சிஸ்கோ அணி 14 ஓவரில் 177 ஓட்டங்கள் எடுக்க வேண்டும் என இலக்கு மாற்றியமைக்கப்பட்டது.
பின்னர் களமிறங்கிய சான் ஃபிரான்சிஸ்கோ அணியில் ஃபின் ஆலன் முதல் பந்திலேயே போல்டு ஆனார். அதனைத் தொடர்ந்து 18 (9) ஓட்டங்கள் எடுத்திருந்த ஜேக் ஃபிரேசர் ஆட்டமிழந்தார்.
எனினும் இந்திய வம்சாவளி வீரர் சஞ்சய் மற்றும் இங்கிலிஷ் இருவரும் வாஷிங்டன் பந்துவீச்சு புரட்டியெடுத்தனர். இங்கிலிஷ் 17 பந்துகளில் 6 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 45 ஓட்டங்கள் குவித்து வெளியேறினார்.
அடுத்து ரூதர்போர்டு டக்அவுட் ஆனார். எனினும் சிக்ஸர் மழைபொழிந்த சஞ்சய் அரைசதம் விளாசினார். சான் ஃபிரான்சிஸ்கோ அணி 13.4 ஓவரில் 177 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
சஞ்சய் 42 பந்துகளில் 79 ஓட்டங்கள் குவித்தார். இதில் 6 சிக்ஸர், 5 பவுண்டர்கள் அடங்கும். ஹசன் கான் 11 பந்துகளில் 32 ஓட்டங்கள் எடுத்தார்.
Sanjay Krishnamurthi shows he definitely ✅ deserves his spot in the San Francisco Unicorns hitting a half century 5️⃣ 0️⃣ coming in at number 3@Royal_Authentic | #MLC2024 | #RoyalFantasticFifty | #CognizantMajorLeagueCricket | #T20 | #WFvSFU pic.twitter.com/FijU5aPLeR
— Major League Cricket (@MLCricket) July 23, 2024
What a THRILLING run chase! SF Unicorns beat the previously undefeated Freedom! 🦄🧡 #MLC2024 | #CognizantMajorLeagueCricket | #T20 pic.twitter.com/pPw7hybVZv
— Major League Cricket (@MLCricket) July 23, 2024
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |