Sovereign Gold Bond: பிப்ரவரி 12ல் மீண்டும் தொடங்கும் அரசு தங்கப் பத்திரத் திட்டம்
Sovereign Gold Bond: தங்கத்தின் மீது எளிமையாக முதலீடு செய்யும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள Sovereign Gold Bond தங்கப் பத்திரங்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
மீண்டும் வரும் பிப்ரவரி 12-ஆம் திகதி தொடங்கும் இந்த SGB திட்டம், பிப்ரவரி 16-ஆம் திகதி வரை ஐந்து நாட்களுக்கு நீடிக்கும்.
ஒரு யூனிட் SGB அதாவது ஒரு கிராம் தங்கத்தின் மதிப்பு ரூ.6,263 என ரிசர்வ் வங்கி (RBI) நிர்ணயித்துள்ளது.
இத்திட்டத்தில், 24 காரட் தங்கத்தின் விலையில் அடிப்படையில், கடந்த ஒரு மூன்று நாட்களின் சராசரி விலை நிர்ணயிக்கப்படும்.
நடப்பு நிதியாண்டில் (2023-24) 4வது முறையாக இந்த தங்கப் பத்திரம் வெளியிடப்படுகிறது.
முன்னதாக கடந்த ஆண்டு ஜூன், செப்டம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில், RBI மூன்று முறை தங்க பாத்திரங்களை சந்தையில் வெளியிட்டது.
ஆன்லைனில் வாங்குபவர்களுக்கு SGB தங்கம் ஒரு கிராமுக்கு 50 ரூபாய் தள்ளுபடியுடன் 6,213 ரூபாய்க்கு விற்கப்படும்.
உள்நாட்டில் தங்கம் வாங்குவதை ஊக்கப்படுத்த மத்திய அரசு முதன்முதலில் நவம்பர் 2015-இல் SGB திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
ஒவ்வொருவரும் குறைந்தது ஒரு (கிராம் தங்கம்) யூனிட்டையாவது முதலீடு செய்ய வேண்டும். தனிநபர்கள் ஒரு நிதியாண்டில் 4 கிலோ மற்றும் அறக்கட்டளைகள் 20 கிலோ வரை வாங்கலாம்.
Sovereign Gold Bond திட்டத்தின் முதலீட்டு காலம் 8 ஆண்டுகள். இதில் முதலீட்டின் மீது ஆண்டுக்கு 2.5 சதவிகிதம் நிலையான வட்டி கிடைக்கும். இந்த வட்டி தொகை அரையாண்டுக்கு ஒரு முறை வரவு வைக்கப்படும்.
முதலீடு செய்த 5 ஆண்டுகளுக்கு பிறகு தேவையெனில் மட்டும் முதலீட்டை வெளியே எடுக்க முடியும்.
இந்த தங்கப் பத்திரங்களை வங்கிகளில் அடமானமாக வைத்து கடன் பெற முடியும். இதில் KYC விதிமுறைகள் பின்பற்றப்படும்.
இதற்கென பட்டியலிடப்பட்ட கமர்ஷியல் வங்கிகள் (ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க், கட்டண வங்கிகள் மற்றும் பிராந்திய கிராமப்புற வங்கிகள் தவிர), தபால் நிலையங்கள், Stock Holding Corporation of India (SHCIL), Clearing Corporation of India (CCIL), designated post offices, National Stock Exchange of India (NSE) மற்றும் Bombay Stock Exchange (BSE) போன்ற பங்குச் சந்தைகளில் இருந்து SGB-களை வாங்குவதற்கு ஒருவர் விண்ணப்பிக்கலாம்.
தங்கத்துடன் ஒப்பிடுகையில், Sovereign Gold Bond-களை வாங்குவதில் பல நன்மைகள் உள்ளன. பொதுவாக தங்கம் வாங்கும் போது விதிக்கப்படும், GST போன்ற கூடுதல் கட்டணங்கள் மற்றும் வரிகள் இதற்கு பொருந்தாது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |