2,500 கோடி நிறுவனத்தை திருமணங்கள் மூலம் உருவாக்கிய தொழிலதிபர்: வெற்றி ரகசியம், சொத்து மதிப்பு தெரியுமா?
இந்திய திருமண முறைகளில் ஷாதி.காம் என்ற திருமண சேர்க்கை இணையதளம் மூலம் பெரும் புரட்சியை ஏற்படுத்தியவர் தான் அனுபம் மிட்டல் (Anupam Mittal), பல்வேறு நபர்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுத்திய நபர் கடந்து வந்த வெற்றிப்பாதை குறித்து பார்ப்போம்.
சாதி எல்லைகளை உடைத்த ஷாதி.காம் நிறுவனர்
இந்தியாவில் திருமணம் என்றாலே, பெரும்பாலும் சாதி, மதம், குடும்ப பின்னணி போன்ற பாரம்பரிய காரணிகளை அடிப்படையாகக் கொண்டே நடைபெறும். ஆனால், இந்த சமூக சட்டகத்தை தகர்த்தெறிந்து, ஒரு புதிய சிந்தனை முறையைக் கொண்டுவந்தவர் தான் அனுபம் மிட்டல்.
ஷாதி.காம் என்ற இணையதள திருமண சேர்க்கை தளத்தின் மூலம், சாதி எல்லைகளை உடைத்து, தனிநபர்களின் விருப்பத்திற்கே முக்கியத்துவம் கொடுக்கும் திருமண முறையை அறிமுகப்படுத்தினார்.
சொந்தமாக 10 ஜெட் விமானங்கள்! 22 வயதில் விமானத் துறையில் சாதித்த பெண் தொழிலதிபர்: அவரின் சொத்து மதிப்பு
ஆரம்பகால சவால்கள்
1974ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் நடுத்தர குடும்பத்தில் பிறந்த அனுபம் மிட்டல் (Anupam Mittal), 1996 ஆம் ஆண்டு, தனது சொந்த திருமண அனுபவத்தின் மூலம் பாரம்பரிய திருமண சேர்க்கை முறையின் சிக்கல்களை உணர்ந்த மிட்டல், அதை மாற்றியமைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டார்.
ஆனால், அப்போதைய சமூக சூழலில், இணையதளம் மூலம் திருமணம் தேடுவது என்பது புதுமையான, ஏற்றுக்கொள்ளப்படாத கருத்தாக இருந்தது.
குடும்பத்தினரின் எதிர்ப்பு, சமூக சந்தேகம் போன்ற பல்வேறு சவால்களை எதிர்கொண்டார். ஆனாலும், தனது கருத்தின் மீது இருந்த நம்பிக்கையால், வெற்றிக்காக பாடுபட்டார்.
ஷாதி.காமின் வெற்றி ரகசியம்
மக்களின் மனநிலையில் மாற்றம் கொண்டு வருவது சுலபமான விஷயமல்ல. ஆனால், மிட்டல் தனது தளத்தை மிகவும் கவனமாக வடிவமைத்தார். சாதி, மதம் போன்றவற்றை விட, தனிநபர்களின் விருப்பத்திற்கே முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அமைத்தார்.
இதோடு நின்றுவிடாமல், சமூகத்தில் நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக, வெற்றிகரமான திருமணங்களின் கதைகளைப் பகிர்ந்து கொண்டார். இதன் விளைவாக, மக்கள் ஷாதி.காமின் மீது நம்பிக்கை வைக்கத் தொடங்கினர்.
இன்று, லட்சக்கணக்கான திருமணங்கள் ஷாதி.காம் மூலம் நடைபெற்றுள்ளன. இது இந்திய சமூகத்தின் திருமணக் கலாச்சாரத்தில் ஏற்பட்ட ஒரு மிகப்பெரிய மாற்றமாகும்.
தொழில்நுட்பத்தின் சக்தி
ஷாதி.காம் மட்டுமல்லாமல், மக்கான்.காம் (ரியல் எஸ்டேட்) மற்றும் மவுஜ் மொபைல் (கேமிங்) போன்ற வெவ்வேறு துறைகளிலும் வெற்றிகரமான நிறுவனங்களை உருவாக்கியுள்ளார் மிட்டல்.
இதன் மூலம் தொழில்நுட்பத்தின் சக்தியை அவர் சிறப்பாக பயன்படுத்தியுள்ளார். இணையதளம் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே தனது நோக்கம் என்று அனுபம் மிட்டல் (Anupam Mittal) அடிக்கடி கூறுவார்.
சொத்து மதிப்பு
அனுபம் மிட்டலின் (Anupam Mittal) பெரும் விடா முயற்சிக்கு கிடைத்த வெற்றி தான் ஷாதி. காம் நிறுவனத்தின் வெற்றி, நியூஸ் 18 அறிக்கைப்படி, ஷாதி.காம்(shaadi.com) நிறுவனத்தின் மொத்த நிகர மதிப்பு சுமார் ரூ.2,500 கோடி.
அனுபம் மிட்டலின் தனிப்பட்ட சொத்து மதிப்பு மட்டும் சுமார் ரூ.185 கோடியாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |