புகலிடக்கோரிக்கை தொடர்பில் பிரித்தானிய உள்துறைச் செயலரின் குலைநடுங்க வைக்கும் கருத்துக்கள்
பிரித்தானிய உள்துறைச் செயலரின் கருத்துக்கள் குலைநடுங்க வைப்பதாக பிரித்தானிய திருச்சபை தலைவர்கள் கூறும் அளவுக்கு அதிரடி நடவடிக்கைகள் எடுத்துக்கொண்டிருக்கிறார் அவர்.

இந்நிலையில், புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு எதிரான அவரது அடுத்த நடவடிக்கை குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
குலைநடுங்க வைக்கும் கருத்துக்கள்
பிரித்தானிய உள்துறைச் செயலரான ஷபானா மஹ்மூத், தான் ஒரு புலம்பெயர்ந்தோர் என்பதால், தன்னை மோசமான வார்த்தைகளால் விமர்சித்தவர்கள் உண்டு என்கிறார்.
ஆனால், அவரே புலம்பெயர்தலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டிருக்கிறார்.
பிரபல ஆங்கிலிக்கன் திருச்சபை முன்னாள் பிஷப்பான Rev Dr ஆண்டர்சன் ஜெரமியா என்பவர், புகலிடம் குறித்த பிரித்தானிய உள்துறைச் செயலரின் கருத்துக்கள் குலைநடுங்க வைப்பதாக தெரிவித்துள்ளார்.

அடுத்தடுத்து 15 ஆண்டுகள் ஆட்சி செய்தவர்கள், தங்கள் தோல்வியையும் அரசியல் பிரிவினைகளையும் மறைக்க புகலிடக்கோரிக்கையாளர்களை பலிகடா ஆக்கிவருகிறார்கள் என்கிறார் அவர்.
அடுத்த கட்ட நடவடிக்கைகள்
இந்நிலையில், பிரித்தானிய உள்துறைச் செயலரான ஷபானா மஹ்மூத், புகலிடக்கோரிக்கையாளர்களைக் குறிவைக்கும் அடுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதாவது, புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் நிதி உதவியில் கைவைக்க திட்டமிட்டுவருகிறார் அவர்.

18 வயதுக்குக் கீழுள்ள பிள்ளைகளைக் கொண்ட குடும்பங்களின் புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்படும்பட்சத்தில், அவர்களுக்கு அளிக்கப்பட்டுவரும் நிதி உதவியை நிறுத்த திட்டமிட்டுவருகிறார் ஷபானா.
அத்துடன், புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட புகலிடக்கோரிக்கையாளர்கள் தங்கள் சொந்த நாட்டுக்குத் திரும்பிச் செல்ல அவர்களுக்கு நிதி உதவி அளிக்கப்படும் என்றும், அதை ஏற்றுக்கொள்ள மறுத்தால், அவர்கள் வலுக்கட்டாயமாக நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என்றும் கூறியுள்ளார் ஷபானா.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |