ஸ்டார்மர் பதவிக்கு ஆபத்து: பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் இவரா?
எப்ஸ்டீன் சர்ச்சையால் பிரதமர் ஸ்டார்மர் பதவிக்கு ஆபத்து உருவாகியுள்ள நிலையில், அடுத்து யார் பிரித்தானியாவின் பிரதமராவார் என்பது தொடர்பில் செய்திகள் வெளியாகத் துவங்கியுள்ளன.
ஸ்டார்மர் பதவிக்கு ஆபத்து
பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் லேபர் கட்சியைச் சேர்ந்தவர் பீற்றர் மாண்டல்சன். நாடாளுமன்ற உறுப்பினரான இருந்து, பல்வேறு பதவிகளை வகித்த பீற்றரை அமெரிக்காவுக்கான பிரித்தானிய தூதராக நியமித்தார் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்.

இதற்கிடையில், அமெரிக்க நீதித்துறை சமீபத்தில் வெளியிட்ட எப்ஸ்டீன் கோப்புகள் என்னும் ஆவணங்களிலிருந்து, அமெரிக்காவுக்கான பிரித்தானிய தூதரான பீற்றர், எப்ஸ்டீனுடன் தொடர்பிலிருந்தது தெரியவந்துள்ளதுடன், பிரித்தானிய அரசின் முக்கியமான பல ஆவணங்களை அவர் எப்ஸ்டீனுடன் பகிர்ந்துகொண்டதற்கு ஆதாரமான சில மின்னஞ்சல்களும் கிடைத்துள்ளன.
இதற்கிடையில், பீற்றருக்கும் எப்ஸ்டீனுக்கும் தொடர்பு இருப்பது குறித்து ஏற்கனவே பிரதமர் ஸ்டார்மருக்குத் தெரியும் என்றும், அது தெரிந்திருந்தும் அவர் பீற்றரை அமெரிக்காவுக்கான தூதராக நியமித்தார் என்பதும் தெரியவந்தது.
ஆகவே, பிரித்தானிய பிரதமரான கெய்ர் ஸ்டார்மர் பதவி விலக் கோரிக்கைகள் வலுத்துவருகின்றன.
பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் இவரா?
இந்நிலையில், பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் யார் என்பது தொடர்பில் செய்திகள் வெளியாகத் துவங்கியுள்ளன.

அவ்வகையில், பிரித்தானியாவின் தற்போதைய உள்துறைச் செயலரான ஷபானா மஹ்மூத் அடுத்து பிரித்தானியாவின் பிரதமராகலாம் என செய்திகள் பரவிவருகின்றன.
மேலும், ஷபானாவுடன் வேறு சிலரும் பிரதமர் பதவிக்கான போட்டியில் உள்ளதாக கூறப்படுகிறது.
அவர்கள், துணை பிரதமரான ஏஞ்சலா ரெய்னர், சுகாதாரச் செயலரான வெஸ் ஸ்ட்ரீட்டிங், ஆற்றல் துறைச் செயலரான எட் மிலிபேண்ட் மற்றும் கிரேட்டர் மான்செஸ்டர் மேயராக இருக்கும் ஆண்டி பர்ன்ஹாம் ஆகியோர் ஆவர்!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |