167 ஓட்டங்கள் குவித்ததுடன் 4 விக்கெட் வீழ்த்திய ஷாபாஸ் அகமது: இமாலய வெற்றி
East zone won by an innings and 210 runs in duleep trophy 2026: பெங்களூருவில் நடந்த துலீப் டிராபி முதல் காலிறுதிப் போட்டியில் ஈஸ்ட் ஸோன் அணி இமாலய வெற்றி பெற்றது.
நார்த் ஈஸ்ட் ஸோன் அணிக்கு எதிரான துலீப் டிராபி முதல் காலிறுதிப் போட்டியில் ஈஸ்ட் ஸோன் அணி, இன்னிங்ஸ் மற்றும் 210 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதல் காலிறுதிப் போட்டி
துலீப் டிராபி முதல் காலிறுதிப் போட்டியில் நார்த் ஈஸ்ட் ஸோன் மற்றும் ஈஸ்ட் ஸோன் அணிகள் மோதின.

ஈஸ்ட் ஸோன் அணி முதல் இன்னிங்ஸில் 467 ஓட்டங்கள் குவித்தது. ஷாபாஸ் அகமது 167 ஓட்டங்களும், சுதிப் 146 ஓட்டங்களும் குவித்தனர்.
பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய நார்த் ஈஸ்ட் ஸோன் அணி, அபிஜித் சர்கார் மற்றும் ஷாபாஸ் அகமதுவின் மிரட்டலான பந்துவீச்சில் 111 ஓட்டங்களுக்கு சுருண்டது.
அதிகபட்சமாக அர்பித் சுபாஷ் 32 ஓட்டங்கள் எடுத்தார். அபிஜித் சர்கார் 5 விக்கெட்டுகளும், ஷாபாஸ் அகமது 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

ஷாபாஸ் அகமது ஆட்ட நாயகன்
ஃபாலோ-ஆன் ஆகி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய நார்த் ஈஸ்ட் அணி 146 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
அதிகபட்சமாக பிஹெய்ரோய்ஜன் ஜோதின் 39 ஓட்டங்களும், ஆகாஷ் சௌத்ரி 27 ஓட்டங்களும் எடுத்தனர். அனுகுல் ராய் 5 விக்கெட்டுகளும், வைபவ் சூர்யவன்ஷி 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
167 ஓட்டங்கள் எடுத்ததுடன் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய ஷாபாஸ் அகமது (Shabhaz Ahmed) ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |