51 ஆண்டுகால சாதனையை முறியடித்த பாகிஸ்தான் வீரர்கள்
Shadab khan - haris rauf highest 10th wicket record: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஷதாப் கான் - ஹாரிஸ் ராஃப் கூட்டணி வரலாற்று சாதனை படைத்தது.
ஒருநாள் கிரிக்கெட்டில் சேஸிங்கில் 10வது விக்கெட்டில் அதிக ஓட்டங்கள் குவித்த கூட்டணி என்ற சாதனையை ஷதாப் கான் - ஹாரிஸ் ராஃப் படைத்தனர்.
ஷதாப் கான்
இங்கிலாந்து அணிக்கு எதிரான நேற்றையப் போட்டியில் பாகிஸ்தான் அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் ஷதாப் கான் (Shadab Khan) 96 பந்துகளில் 5 சிக்ஸர், 13 பவுண்டரிகளுடன் 113 ஓட்டங்கள் விளாசினார்.
பாகிஸ்தான் அணி 154 ஓட்டங்களுக்கு 9 விக்கெட் என தடுமாறியபோது, ஷதாப் கான் மற்றும் ஹாரிஸ் ராஃப் கூட்டணி அமைத்து 89 ஓட்டங்கள் குவித்து வெற்றி பெற வைத்தனர்.
51 ஆண்டுகால சாதனை
ஒருநாள் கிரிக்கெட் சேஸிங் போட்டியில், 10வது விக்கெட்டில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.
இதன்மூலம் ஷதாப் கான் - ஹாரிஸ் ராஃப் கூட்டணி 51 ஆண்டுகால சாதனையை முறியடித்தது.
1975யில் டெரிக் முர்ரே , ஆன்டி ராபர்ட்ஸ் கூட்டணி 64 ஓட்டங்கள் (10வது விக்கெட்டுக்கு) எடுத்ததே அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.
