20 பந்துகளில் 50 ஓட்டங்கள்! சாதனை படைத்த ஷதாப் கான்
ஷதாப் கான் 22 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 52 ஓட்டங்கள் விளாசினார்
டி20 போட்டிகளில் ஷதாப் கான் 28 சிக்ஸர்கள் மற்றும் 26 பவுண்டரிகள் விளாசியுள்ளார்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியில் பாகிஸ்தான் வீரர் ஷதாப் கான் அதிவேக அரைசதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.
சிட்னியில் பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்து வருகிறது. முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 185 ஓட்டங்கள் குவித்தது.
அந்த அணியின் ஆல்ரவுண்டர் வீரர் ஷதாப் கான் ருத்ர தாண்டவமாடினார். சிக்ஸர்களை பறக்க விட்ட அவர், 20 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
Shadab Khan gets to his fifty in just 20 deliveries but falls immediately ?#T20WorldCup | #PAKvSA | ?: https://t.co/3VVq7VAJLt pic.twitter.com/GVnOPcLnjz
— ICC (@ICC) November 3, 2022
இதன்மூலம் டி20 போட்டிகளில் அதிவேகமாக அரைசதம் விளாசிய இரண்டாவது பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
81 போட்டிகளில் விளையாடியுள்ள ஷதாப் கானுக்கு இது முதல் சர்வதேச டி20 அரைசதம் ஆகும்.
5️⃣0️⃣ in just 2️⃣0️⃣ balls! ?@76Shadabkhan hammers the second-fastest fifty for a Pakistan batter in T20Is ?#WeHaveWeWill | #T20WorldCup | #PAKvSA pic.twitter.com/BdxERKxMW6
— Pakistan Cricket (@TheRealPCB) November 3, 2022