மின்னல் வேகத்தில் பாய்ந்து ஒற்றை கையில் கேட்ச்! அசர வைத்த வீரரின் வீடியோ
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில், பாகிஸ்தான் வீரர் ஷதாப் கான் ஸ்பைடர்மேன் போல அபாரமாக கேட்ச் பிடித்தார்.
முல்தானில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில், பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தியது.
இந்த போட்டியில் ஷாமர் ப்ரூக்ஸ் அபாரமாக விளையாடிக் கொண்டிருந்தார். முகமது நவாஸ் வீசிய ஓவரில், ப்ரூக்ஸ் அடிக்க முயன்றபோது எட்ஜ் ஆகி பறந்தது.
அப்போது பாகிஸ்தான் வீரர் ஷதாப் கான் மின்னல் வேகத்தில் பாய்ந்து வந்து ஒற்றை கையில் கேட்ச் பிடித்து அசத்தினார்.
Jee @babarazam258 aap keh rahe thay budha ho gaya hun mai. Meri dua hai aap is hi tarhan 100 pe 100 martay raho aur hamesha jawaan raho, Khushdil aesa hi chakkay marta rahe aur hamari behtar se behtar effort kerti rahe. #PakistanZindabad pic.twitter.com/PNbH9QpzFp
— Shadab Khan (@76Shadabkhan) June 8, 2022
இதனால் 83 பந்துகளில் 70 ஓட்டங்கள் எடுத்திருந்த ப்ரூக்ஸ் ஆட்டமிழந்தார். அவரது விக்கெட் பாகிஸ்தான் அணிக்கு திருப்புமுனையாக அமைந்தது.