எந்த பேட்ஸ்மேனுக்கு பந்து வீசுவுது மிகவும் கடினம்? இந்திய நட்சத்திரத்தை கூறிய பாகிஸ்தானின் ஷதாப்
பந்துவீசுவதற்கு மிகவும் கடினமான பேட்ஸ்மேன் யார்? என்ற கேள்விக்கு பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ஷதாப் கான் பதிலளித்துள்ளார்.
ட்விட்டரில் ஒரு கேள்வி பதில் அமர்வில், ஷதாப் தனது ரசிகர்களுடன் உரையாடினார் மற்றும் அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார்.
இதன் போது பந்துவீசுவதற்கு மிகவும் கடினமான வீரர் யார்? என ரசிகர் ஒருவர் ஷதாப்பிடம் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த ஷதாப், இந்திய நட்சத்திர வீரர் ரோகித் சர்மா மற்றும் அவுஸ்திரேலிய அதிரடி மன்னன் டேவிட் வார்னர் என கூறினர்.
Rohit Sharma and Warner #AskShadab https://t.co/qZLJCdJyae
— Shadab Khan (@76Shadabkhan) December 20, 2021
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமனில் நடந்த டி20 உலகக் கோப்பை போட்டியில் அரையிறுதியை எட்டிய பாகிஸ்தான் அணியில் ஷதாப்பும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.