மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக சதம் விளாசிய ஷத்மான் இஸ்லாம்; மழையால் இடைநிறுத்தம்
Shadman Islam hit century vs west indies in 1st test: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், வங்கதேச வீரர் ஷத்மான் இஸ்லாம் சதம் விளாசியுள்ளார்.
சதம் விளாசிய ஷத்மான் இஸ்லாம்
வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

நேற்று டக்காவில் தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற வங்கதேச அணி முதலில் துடுப்பாட்டாத்தை தேர்வு செய்தது.
தொடக்க ஆட்டக்காரர் ஷத்மான் இஸ்லாமின் சதத்தால் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 272 ஓட்டங்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.
வங்கதேசம் தரப்பில் அதிகபட்சமாக ஷத்மான் இஸ்லாம் 105 ஓட்டங்களும், Tawhid Hridoy 42 ஓட்டங்களும் குவித்தனர்.

மேற்கிந்திய தீவுகள் தரப்பில் ஜோமெல் வரிக்கன் 5 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.

இதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸை ஆட தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 1 விக்கெட் இழப்பிற்கு 89 ஓட்டங்கள் குவித்த நிலையில் மழை பெய்து வருவதால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

ப்ரண்டன் கிங் 20 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, ஜான் கேம்ப்பெல் 53 ஓட்டங்களுடனும், டஜெனெரைன் சந்தர்பால் 21 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.