நிழல் இல்லாத அந்த 2 நாட்கள் - எப்படி கண்டறிவது?
இந்தியாவில் தமிழகத்தில் நிழல் இல்லாத இரண்டு நாட்களை காணக்கூடியதாக இருக்கும் என கூறப்படுகிறது.
நிழல் இல்லாத அந்த 3 நாட்கள்
தினமும் சூரியன் நமக்கு மேல் உச்சியில் இருப்பது போல் இருந்தாலும், வருடத்திற்கு 2 நாட்கள் உச்சியில் வந்து நிற்கும்.
அந்த இரண்டு நாட்கள் நிழல் இல்லாத நாட்களாக இருக்கும். அதை பூஜ்ய நிழல் எனவும் அழைப்பார்கள்.
இந்த நிகழ்வு வெறும் ஓரிரு நிமிடங்கள் மட்டுமே நிகழும். இதனடிப்படையில் இந்த ஆண்டு, திருச்சி மாவட்டத்தில் இன்று (17) திருச்சி, மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி, மணிகண்டம், திருவெறும்பூர் பகுதிகளிலும் நாளை (18) புள்ளம்பாடி, லால்குடி, மண்ணச்சநல்லூர், ஸ்ரீரங்கம், முசிறி, தா.பேட்டை, தொட்டியம் பகுதிகளிலும், நாளை மறுநாள் (19) துறையூர் உப்பிலியபுரம் பகுதிகளிலும் நிகழும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்க திருச்சி மாவட்ட செயலாளர் மணிகண்டன் கூறுகையில், இந்த வானியல் நிகழ்வை அனைவரும் வீட்டில் இருந்தப்படியே செய்து பார்க்க முடியும்.
உரிய நேரத்தில் சமதள பரப்பளவில் ஏதேனும் ஒரு உருளையான பொருளை செங்குத்தாக வைத்து அதன் நிழல் விழவில்லையா என்பதை நீங்கள் பார்க்க முடியும்.
மேலும் நீங்கள் வசிக்கும் இடங்களில் எப்போது நிழல் இல்லா நேரம் ஏற்படும் என்பதை பற்றி தெரிந்துக்கொள்ள இந்த இணையத்தளத்திற்குள் செல்லவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |