8 சிக்ஸர், 23 ஃபோர்ஸுடன் 205 ரன் விளாசல்! வரலாற்று சாதனை
மகளிர் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்டின் முதல் நாளில் இந்தியா 456 ஓட்டங்கள் குவித்துள்ளது.
ஸ்மிரிதி மந்தானா சதம்
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மகளிர் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடங்கியுள்ளது.
நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்து களமிறங்கியது. ஸ்மிரிதி மந்தானா, ஷஃபாலி வெர்மா தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கினர்.
ஆரம்பம் முதலே இருவரும் அதிரடியில் மிரட்டினர். குறிப்பாக ஷஃபாலி வெர்மா சிக்ஸர்களை பறக்கவிட்டார். இவர்களின் பார்ட்னர்ஷிப் முதல் விக்கெட்டுக்கு 292 ஓட்டங்கள் குவித்தது.
Form >> #SmritiMandhana pic.twitter.com/H5KArS0q6P
— Cricbuzz (@cricbuzz) June 28, 2024
இதன்மூலம் மகளிர் டெஸ்ட் வரலாற்றில் அதிக ஓட்டங்கள் குவித்த இணை என்ற சாதனையை படைத்தனர். சதம் விளாசிய மந்தனா 149 ஓட்டங்களில் டெல்மி ஓவரில் அவுட் ஆனார். அவரது ஸ்கோரில் ஒரு சிக்ஸர், 27 பவுண்டரிகள் அடங்கும்.
ஷஃபாலி வெர்மா அதிரடி
பின்னர் வந்த ஸுபா 15 ஓட்டங்களில் வெளியேற, ஷஃபாலி வெர்மா அதிரடியாக 194 பந்துகளில் இரட்டை சதம் அடித்தார். இது அவரது முதல் இரட்டை சதம் ஆகும்.
Shafali Verma departs after registering her highest Test score - 205 #INDWvsSAW pic.twitter.com/DQUEV3FSZl
— Cricbuzz (@cricbuzz) June 28, 2024
அத்துடன் டெஸ்டில் இரட்டை சதம் விளாசிய இரண்டாவது இந்திய வீராங்கனை என்ற இமாலய சாதனையை படைத்தார். ஷஃபாலி வெர்மா 197 பந்துகளில் 8 சிக்ஸர், 23 பவுண்டரிகளுடன் 205 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
அடுத்து அரைசதம் விளாசிய ஜெமிமா ரோட்ரிகஸ் 55 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். இந்திய அணி முதல் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 525 ஓட்டங்கள் குவித்துள்ளது. ஹர்மன்பிரீத் கவுர் 42 ஓட்டங்களுடனும், ரிச்சா கோஷ் 43 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |