முதல் முறையாக பில்லியனர் கிளப்பில் இணைந்த ஷாருக் கான்! பன்மடங்கு உயர்ந்த சொத்து மதிப்பு
பிரபல இந்தி நடிகர் ஷாருக் கான் முதல் முறையாக பில்லியனர் கிளப்பில் இணைந்துள்ளார்.
ஷாருக் கான்
ஹுருன் இந்தியா 2025ஆம் ஆண்டின் பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் பல்வேறு துறைகளில் உள்ள பிரபலங்களின் செல்வதை ஹுருன் ஆராய்ச்சி நிறுவனம் மதிப்பிட்டு இதனை கூறியுள்ளது.
அதன்படி, பாலிவுட்டின் பாட்ஷா என்று அழைக்கப்படும் நடிகர் ஷாருக் கான் (59) முதல் முறையாக பில்லியனர் கிளப்பில் இணைந்துள்ளார். அவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.12,490 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் கடந்த ஆண்டு 870 மில்லியன் நிகர மதிப்புடன் இருந்த முதலிடத்தையும் தக்க வைத்துள்ளார்.
இதன்மூலம் 2025ஆம் ஆண்டில் பாலிவுட்டின் மிகப்பெரிய பணக்காரராக உருவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |