ஒரு திரைப்படத்தால் தள்ளிப்போன நூற்றுக்கணக்கான திருமணங்கள்: ஒரு சுவாரஸ்ய தகவல்
பிரபல நடிகர் ஷாரூக்கானின் திரைப்படம் ஒன்றினால், நூற்றுக்கணக்கான திருமணங்கள் தள்ளிவைக்கப்பட்டதைக் குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
தள்ளிப்போன நூற்றுக்கணக்கான திருமணங்கள்
2001ஆம் ஆண்டு, ஷாரூக்கான், தேவ்தாஸ் என்ற திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருந்தார்.
அந்த திரைப்படத்துக்காக மும்பையில் ஒரு கிலோமீற்றர் தொலைவுக்கு, பிரம்மாண்ட செட் ஒன்று போடப்பட்டது.
அந்த செட்டுக்காக, மும்பையிலுள்ள அத்தனை ஜெனரேட்டர்களையும் வாடகைக்கு எடுத்தார்களாம் திரைப்படக் குழுவினர்.
ஆகவே, அந்த நேரத்தில் மும்பையிலுள்ள திருமண மண்டபங்கள் ஒன்றிற்கும் ஜெனரேட்டர்கள் வாடகைக்குக் கிடைக்கவில்லையாம்.
அதனால், பல திருமணங்கள் வேறு திகதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளன என்கிறார் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளரான பினோத் பிரதான்.
பின்னாட்களில், பினோத்தால் பல திருமணங்கள் தள்ளிப்போய்விட்டதாக மக்கள் கூறுவதுண்டு என்கிறார் அவர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |