நீங்க வேணும்... கௌதம் கம்பீருக்கு ஷாருக்கான் வழங்கிய Blank Cheque: குறிவைக்கும் பிசிசிஐ
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பொறுப்புக்கு கவுதம் கம்பீரை கொண்டுவர பிசிசிஐ ஆர்வமாக உள்ளது என்றே தகவல் வெளியாகியுள்ளது.
வழிகாட்டியாக கவுதம் கம்பீர்
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டிற்கு மாற்றாக புதிதாக ஒருவரைக் கண்டுபிடிப்பதில் பிசிசிஐக்கு பல சிறந்த வாய்ப்புகள் இருப்பதாகத் தெரியவில்லை.
ஆனால் கொல்கத்தா அணியின் இந்த தொடருக்கான வழிகாட்டியாக செயல்பட்ட கவுதம் கம்பீருக்கு அந்த அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ஷாருக்கான் Blank Cheque ஒன்றை வழங்கி, அடுத்த 10 ஆண்டுகளுக்கு உங்கள் சேவை வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
கம்பீர் லக்னோ அணிக்காக பணியாற்றி வந்தபோது ஷாருக்க்கான் அவரை அணுகியதாகவே கூறப்படுகிறது. தற்போது கம்பீரின் வழிகாட்டுதலில் கொல்கத்தா அணியும் சேம்பியன் கிண்ணத்தை வென்றுள்ளது.
பல ஆண்டுகளுக்கு தொடர வேண்டும்
ஆனால் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பொறுப்புக்கு வர கம்பீருக்கும் விருப்பம் இருப்பதாகவே கூறப்படுகிறது. மேலும், தாம் விண்ணப்பித்தால் கட்டாயம் அது ஏற்கப்படும் என்ற உறுதி அளிக்க வேண்டும் என கம்பீர் தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பிசிசியை கம்பீரை தங்கள் பக்கத்தில் இணைத்துக்கொள்ள தீவிரப்படுத்தும் அதேவேளை ஷாருக்கானும் தமது அணிக்கு கம்பீரின் சேவை பல ஆண்டுகளுக்கு தொடர வேண்டும் என தீவிரம் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |