ஷாருக்கானுக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் - பலத்த பாதுகாப்பில் மன்னத் வீடு
பாலிவுட்டின் கிங் கான் தொடர்பான செய்தி ஒன்று வெளியாகி வருவது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சல்மான் கானை அடுத்து தற்போது ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது.
ஷாருக்கானுக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல்
இதைத் தொடர்ந்து மும்பை காவல்துறை அதிரடி நடவடிக்கையில் இறங்கி, ஷாருக்கின் வீடு 'மன்னத்' வெளியே பாதுகாப்பை அதிகரித்துள்ளனர்.
சில காலமாக சல்மான் கானுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வந்தன. சில மாதங்களுக்கு முன்பு, அவரது வீட்டின் வெளியே துப்பாக்கிச் சூடு நடந்தது.
பாபா சித்திக் இறந்ததை அடுத்து சல்மான் கானின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில், தற்போது ஷாருக்கிற்கும் கொலை மிரட்டல் வந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஷாருக்கானுக்கு நேற்று தான் கொலை மிரட்டல் வந்துள்ளது. தொலைப்பேசியில் மிரட்டல் வந்ததையடுத்து, ஷாருக் குழுவினர் உடனடியாக புகார் அளித்தனர்.
இந்த மிரட்டல் அழைப்பு ராய்ப்பூரில் இருந்து வந்ததாகவும், பைசான் என்ற நபரிடமிருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும், சில நாட்களுக்கு முன்பு தனது தொலைபேசி திருடப்பட்டதாக பைசான் என்ற நபர் கூறுகிறார்.
அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பாந்த்ரா காவல் நிலையத்திற்கு தொடர்புக்கொண்டு, ரூ.50 லட்சம் தராவிட்டால் ஷாருக்கானை கொன்றுவிடுவேன் என்று கூறியதாக பொலிஸார் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மிரட்டல் வந்ததை அடுத்து அவருடைய பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. மிரட்டல் விடுக்கப்பட்ட செய்தி வெளியானதும், ஏராளமான ரசிகர்கள் மன்னத்திற்கு வெளியே கூடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |