மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாகிஸ்தானின் வேகப்புயல்! வெளியான புகைப்படம்
பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் ஷா அஃப்ரிடி அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
முழங்கால் காயம்
கடந்த சூலை மாதம் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் ஷா அஃப்ரிடிக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது.
எனினும், அவர் வலியுடன் டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடி, இறுதிப் போட்டியின் பாதியில் காயம் மோசமடைந்ததால் வெளியேறினார்.
இந்த நிலையில், ஷஹீன் ஷா அஃப்ரிடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
முழங்கால் காயத்தில் இருந்து மீண்டு வரும் நிலையில், ஷஹீன் குடல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டார். இதனால் அவருக்கு அறுவை குடல் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'இன்று ஒரு குடல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால் Alhumdulilah நன்றாக உணர்கிறேன். உங்கள் பிரார்த்தனையில் என்னை நினைவில் கொள்ளுங்கள்' என தெரிவித்துள்ளார்.
Had an appendectomy today but Alhumdulillah feeling better. Remember me in your prayers. ? pic.twitter.com/M70HWwl9Cn
— Shaheen Shah Afridi (@iShaheenAfridi) November 20, 2022
பாகிஸ்தானுக்கு பின்னடைவு
பாகிஸ்தான் அணி அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. ஷஹீன் ஷா அஃப்ரிடிக்கு ஓய்வு தேவை என்பதால், அவர் இந்த தொடரில் விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது.
இது பாகிஸ்தான் அணிக்கு பெரும் பின்னடைவாகும். அதேபோல் ஜனவரி மாதம் தொடங்கும் நியூசிலாந்துக்கு எதிரான தொடரையும் ஷஹீன் தவற விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
@Getty Images