செல்ஃபி கேட்ட நிருபருக்கு பாகிஸ்தான் வேகப்புயல் கூறிய அசரவைக்கும் பதில்! கலக்கத்தில் இந்திய ரசிகர்கள்
இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் வீழ்த்திய பின்னர் தான் செல்ஃபி கொடுப்பேன் என பாகிஸ்தான் வீரர் ஷாகின் அப்ரிடி கூறியது வைரலாகியுள்ளது.
உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி இன்று அகமதாபாத்தில் நடக்கிறது. இரு அணிகளும் இதுவரை 2 வெற்றிகளை பெற்றுள்ளன. எனவே, ஹாட்ரிக் வெற்றியை பெற போவது என்ற கேள்வி ரசிகர்கள் இடையே எழுந்துள்ளது.
இதற்கிடையில் பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர்கள் இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக இருப்பார்கள் என கிரிக்கெட் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இந்த நிலையில் குஜராத் வந்தடைந்த பாகிஸ்தான் வீரர்களில் ஷாகின் அப்ரிடியிடம் பத்திரிகையாளர்கள் ஒரு செல்ஃபி எடுத்துக் கொள்ளலாமா என்று கேட்டுள்ளனர்.
அதற்கு அவர் ' செல்ஃபி தானே எடுக்கலாம். இந்தியாவுக்கு எதிரான இன்றைய போட்டியில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய பின்னர் நிச்சயம் உங்களுடன் செல்ஃபி எடுத்து கொள்கிறேன் ' என கூறியுள்ளார்.
ஷாகினின் இந்த பதில் இந்திய ரசிகர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் பாகிஸ்தானின் புயல்வேகப்பந்து வீச்சாளர் என்று கருதப்படும் ஷாகின் அப்ரிடி இப்போட்டியில் கூறியபடியே விக்கெட் வீழ்த்தக்கூடியவர் தான் என்று ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |