ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே 4 விக்கெட்டுகளை சாய்த்த வீரர்! கதிகலங்கிய எதிரணியின் வீடியோ
டி20 பிளாஸ்ட் தொடரில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் ஷா அப்ரிடி ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி மிரட்டினார்.
டாம் மூர்ஸ் விளாசல்
நாட்டிங்காமின் ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடந்த போட்டியில் நாட்டிங்கம்ஷைர் மற்றும் வார்விக்ஷைர் அணிகள் மோதின. முதலில் ஆடிய நாட்டிங்கம்ஷைர் 168 ஓட்டங்கள் எடுத்தது.
அதிரடியில் மிரட்டிய டாம் மூர்ஸ் 42 பந்துகளில் 4 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 73 ஓட்டங்கள் விளாசினார். ஹசன் அலி மற்றும் லிண்டோட் தலா 3 விக்கெட்டுகளும், மேக்ஸ்வெல் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
மிரள வைத்த ஷாஹீன் ஷா
வார்விக்ஷைர் அணி களமிறங்கிய நிலையில், முதல் ஓவரிலேயே பேரதிர்ச்சி காத்திருந்தது. ஷாஹீன் ஷா அப்ரிடியின் அசுரவேக பந்துவீச்சில் அலெக்ஸ் டேவிஸ், கிறிஸ் பெஞ்சமின் முதல் இரண்டு பந்துகளிலும், கடைசி இரண்டு பந்துகளில் டன் மௌஸிலே மற்றும் எட் பர்னார்டும் ஆட்டமிழந்தனர்.
ஒரே ஓவரில் 4 வீரர்கள், அதுவும் முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்ததால் வார்விக்ஷைர் அணி உறைந்துபோனது. எனினும் யேட்ஸ் (65), லிண்டோட் (27) ஆகியோர் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெற வைத்தனர்.
Crazy from Shaheen Shah Afridi. Took 4 wickets in an over. 3 of those were bowled or LBW.
— Himanshu Pareek (@Sports_Himanshu) June 30, 2023
Eagle flying in style in the English sky!#T20Blastpic.twitter.com/Tq5bMdYo8S
அந்த அணி 19.1 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 172 ஓட்டங்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஷாஹீன் ஷா அப்ரிடி ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
நாட்டிங்காமின் ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடந்த போட்டியில் நாட்டிங்கம்ஷைர் மற்றும் வார்விக்ஷைர் அணிகள் மோதின. முதலில் ஆடிய நாட்டிங்கம்ஷைர் 168 ஓட்டங்கள் எடுத்தது.
அதிரடியில் மிரட்டிய டாம் மூர்ஸ் 42 பந்துகளில் 4 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 73 ஓட்டங்கள் விளாசினார். ஹசன் அலி மற்றும் லிண்டோட் தலா 3 விக்கெட்டுகளும், மேக்ஸ்வெல் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
மிரள வைத்த ஷாஹீன் ஷா
வார்விக்ஷைர் அணி களமிறங்கிய நிலையில், முதல் ஓவரிலேயே பேரதிர்ச்சி காத்திருந்தது. ஷாஹீன் ஷா அப்ரிடியின் அசுரவேக பந்துவீச்சில் அலெக்ஸ் டேவிஸ், கிறிஸ் பெஞ்சமின் முதல் இரண்டு பந்துகளிலும், கடைசி இரண்டு பந்துகளில் டன் மௌஸிலே மற்றும் எட் பர்னார்டும் ஆட்டமிழந்தனர்.
ஒரே ஓவரில் 4 வீரர்கள், அதுவும் முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்ததால் வார்விக்ஷைர் அணி உறைந்துபோனது.
எனினும் யேட்ஸ் (65), லிண்டோட் (27) ஆகியோர் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெற வைத்தனர்.
அந்த அணி 19.1 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 172 ஓட்டங்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.