கடைசிப்போட்டியில் 4 விக்கெட்! தொடர் நாயகன் விருதையும் வென்று அணியை காப்பாற்றிய வீரர்
பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் 2-2 என சமனில் முடிந்தது.
லாகூரில் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டி நடந்தது. முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 178 ஓட்டங்கள் எடுத்தது.
அணித்தலைவர் பாபர் அசாம் 44 பந்துகளில் 69 ஓட்டங்களும், பக்ஹர் ஜமான் 43 ஓட்டங்களும் விளாசினர்.
பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணி 19.2 ஓவரில் 169 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. டிம் செய்பெர்ட் 52 (33) ஓட்டங்கள் எடுத்தார். மிரட்டலாக பந்துவீசிய ஷாஹீன் அஃப்ரிடி 4 விக்கெட்டுகளும், உஸாமா மிர் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
Babar and Shaheen script Pakistan's victory in fifth T20I
— PCB Media (@TheRealPCBMedia) April 27, 2024
Read more ➡️ https://t.co/WgdTm0xvuE#PAKvNZ
பாகிஸ்தான் வெற்றி பெற்றதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 2-2 என சமனில் முடிந்தது. முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது.
ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடி பெற்றார்.
போட்டிக்கு பின்னர் பேசிய அஃப்ரிடி, ''எது நடந்தாலும் அது அணிக்கு நல்லது. நான் பந்தைக்கொண்டு அடிக்க முயற்சிக்கிறேன், மட்டையிலும், களத்திலும் பங்களிக்க முயற்சிக்கிறேன். பந்து சற்று குறைவாகவே இருந்தது, எனவே நாங்கள் பந்துவீச்சு Wicket-to-Wicket மற்றும் Variationயில் கவனம் செலுத்தினோம், அது வேலையும் செய்தது.
பந்து ரிவெர்சிங்கில் இருக்கும்போது, நான் அதில் சில விடயங்களை கலக்க முயற்சிக்கிறேன், ஆனால் யார்க்கர் பந்து தான் எந்த வடிவிலும் சிறந்த பந்துவீச்சு'' என தெரிவித்தார்.
ஷாஹீன் அஃப்ரிடி 61 டி20 போட்டிகளில் 81 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். அவரது சிறந்த பந்துவீச்சு 4/22 என்பது குறிப்பிடத்தக்கது.
4️⃣-3️⃣0️⃣ in the fifth T20I
— Pakistan Cricket (@TheRealPCB) April 27, 2024
8️⃣ wickets in the series
Player of the match and player of the series, @iShaheenAfridi! ?#PAKvNZ | #AaTenuMatchDikhawan pic.twitter.com/JFX1OdHciu
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |