எதிர்பாராத ட்விஸ்ட் கொடுத்த பாகிஸ்தான்! முடித்துவிட்ட இருவர்..93 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் பாகிஸ்தான் அணி 93 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
பிரேவிஸ் அதகளம்
லாகூரில் நடந்த டெஸ்டில் பாகிஸ்தான் அணி 277 ஓட்டங்கள் வெற்றி இலக்கை தென் ஆப்பிரிக்காவுக்கு நிர்ணயித்தது.
மூன்றாம் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 2 விக்கெட் இழப்பிற்கு 51 ஓட்டங்கள் எடுத்திருந்தது. அதனைத் தொடர்ந்து இன்று 4வது நாள் ஆட்டத்தை தென் ஆப்பிரிக்கா தொடர்ந்தது.
டோனி டி ஸோர்ஸி 16 ஓட்டங்களில் ஷாஹீன் அப்ரிடி பந்துவீச்சில் lbw ஆனார். அடுத்து வந்த ஸ்டப்ஸ் 2 ஓட்டங்களில் வெளியேறினார்.
எனினும் டெவல்ட் பிரேவிஸ் (Dewald Brevis) அதிரடியில் மிரட்ட அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.
ஷாஹீன் அப்ரிடி
ஆனால் நோமன் அலி (Noman Ali) அவரது வேகத்திற்கு முடிவு காட்டினார். பிரேவிஸ் 54 பந்துகளில் 2 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 54 ஓட்டங்கள் எடுத்த நிலையில் போல்டு ஆனார்.
அதன் பின்னர் வந்த வீரர்கள் ஷாஹீன் அப்ரிடியின் மிரட்டலான பந்துவீச்சில் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க, தென் ஆப்பிரிக்க அணி 183 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
இதன்மூலம் பாகிஸ்தான் அணி 93 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஷாஹீன் அப்ரிடி (Shaheen Afridi), நோமன் அலி தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |