வங்கதேச வீரரை வலியால் துடிக்க வைத்த சகின் அப்ரிடி! அசுர வேகத்தில் பந்தை பிடித்து எறிந்த காட்சி
வங்கதேச அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில், பாகிஸ்தான் வீரர் சகின் அப்ரிடி, வங்கதேச வீரர் அபிப் ஹொசைன் மீது பந்தை மின்னல் வேகத்தில் எறிந்து கீழே விழ வைத்த வீடியோ காட்சி வெளியாகி, இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
பாகிஸ்தான் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.
இதில் இரு அணிகளுக்கிடையே முதல் டி20 போட்டியில், பாகிஸ்தான் வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் ஆடிய வங்கதேசம் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 108 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
வங்கதேச அணியில் அதிகபட்சமாக நஜ்முல் ஹொசைன் சாண்டோ 40 ஓட்டங்களும், அபிப் ஹொசைன் 20 ஓட்டங்களும் எடுத்தனர். பாகிஸ்தான் அணியில் சகின் அப்ரிடி மற்றும் சதாப் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதையடுத்து 109 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 18.1 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 109 ஓட்டங்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்று முன்னிலையுடன் கைப்பற்றியுள்ளது.
Gets hit for a 6 and Shaheen Shah loses his control next ball!
— Israr Ahmed Hashmi (@IamIsrarHashmi) November 20, 2021
I get the aggression but this was unnecessary. It was good however that he went straight to apologize after this.#BANvPAK pic.twitter.com/PM5K9LZBiu
மேலும், இப்போட்டியில் வங்கதேச அணி பேட்டிங் ஆடிக் கொண்டிருந்த போது, ஆட்டத்தின் 2.3-வது பந்தை பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சகின் அப்ரிடி வீசினார்.
அதை அபிப் ஹொசைன் சிறப்பாக தடுத்து ஆட, உடனே பந்தை பிடித்த சகின் அப்ரிடி அவர் கிரிசிற்கு வெளியே இருப்பதாக நினைத்து, பந்தை மின்னல் வேகத்தில் ஸ்டம்பை நோக்கி வீசினார்.
Shaheen Shah Afridi went up to Afif Hossain post-match ?? #SpiritofCricket pic.twitter.com/F1dO6F8gn0
— Pakistan Cricket (@TheRealPCB) November 20, 2021
ஆனால், அபிப் ஹொசைன் விலகாத காரணத்தினால், பந்தானது அவர் மீது பட்டது. இதனால் அபிப் ஹொசைன் வலியால் துடித்தார்.
உடனே சகின் அப்ரிடி அருகில் சென்று மன்னிப்பு கேட்டார். அதே போன்று போட்டி முடிந்த பின்பு மன்னிப்பு கேட்ட வீடியோ இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.