எங்கள் கேப்டனுக்கு ஆதரவாக நாங்கள் இங்கு இருக்கிறோம்! முன்னாள் வீரரின் உணர்ச்சிப் பதிவு
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் அணிக்கான பட்டியலில் மூன்று வீரர்களை கூடுதலாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இணைத்துள்ளது.
விமர்சனத்திற்குள்ளான பாபர் அசாம்
இங்கிலாந்து எதிரான டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களை இழந்ததால் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் கடும் விமர்சனத்திற்குள்ளானார்.
பாகிஸ்தான் ரசிகர்களே அவரை வசைபாடிய நிலையில், இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக் தனது ட்விட்டர் பக்கத்தில் பாபருக்கு ஆதரவாக பதிவிட்டார். அன்பார்ந்த பாகிஸ்தான், உங்கள் கேப்டன் பாபர் அசாமை மதியுங்கள். அவரை தலைசிறந்த வீரர். இங்கிலாந்து வீரராக அவருக்கு மரியாதை அளிக்கிறேன் என அவர் கூறியிருந்தார்.
Dear Pakistan, respect your Captain Babar Azam. He is a great Player!
— Harry Brook (@harrybrookk) December 21, 2022
Respect ???????❤️ pic.twitter.com/gpJvL8aXtB
இந்த நிலையில் பாகிஸ்தான் அணி அடுத்ததாக நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதற்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது கூடுதலாக மூன்று வீரர்கள் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷாகித் அப்ரிடியின் ட்வீட்
இதுகுறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி வெளியிட்டுள்ள பதிவில், 'முதல் டெஸ்ட் போட்டிக்கான அணியை வலுப்படுத்தும் வகையில் மேலும் 3 வீரர்களாக ஷாநவாஸ் தஹானி, மிர் ஹம்சா மற்றும் சஜித் கான் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். கேப்டனுக்கு ஆதரவாக நாங்கள் இங்கு இருக்கிறோம், அதனால் அவருக்கு அகற்றும் வாய்ப்புகள் அதிகம் இருக்கும்' என தெரிவித்துள்ளார்.
I am pleased to announce that 3 more players Shahnawaz Dhani, Mir Hamza and Sajid Khan have been added to strengthen the squad for the first test match. We are here to support the captain so he may have more option at his disposal?? https://t.co/yrCHdEXdzG
— Shahid Afridi (@SAfridiOfficial) December 24, 2022
@AP